சென்னை ஐ ஐ டி மாணவி தற்கொலை வழக்கில் தீடீர் திருப்பம்.
சென்னை :
கிண்டி ஐ ஐ டி யில் முதலாம் ஆண்டு படித்து வந்த கேரளா மாணவி பாத்திமா தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்கொலை வழக்கை முதலில் பதிவு செய்த கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் மாணவியின் செல்போனில் பதிவு செய்யபட்டு இருந்த தற்கொலை கடிதம் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.
இதனால் தனது மகளின் மரணம் தற்கொலை அல்ல, பேராசியர்களின் நெருக்கடியால் தான் தனது மகள் இறந்துள்ளார் என பாத்திமாவின் தந்தை லத்தீப் தமிழக அரசிடம் புகார் அளித்தார்.

அதன் பிறகு இந்த வழக்கானது மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மத்திய குற்றப்பிரிவின் கூடுதல் ஆணையர் ஈஸ்வரமூர்த்தி தலைமையிலான குழு பேராசியர்கள் ஹேமச்சந்திரன், சுதர்சன் பத்பநாபன், மிலிந்த் மூன்று பேரிடம் விசாரணை நடத்தி வருகிறது.
அதே சமயம் மாணவியின் நெருங்கிய வட்டாரங்களில் விசாரணை நடை பெற்று வருகிறது. இதனிடையே மாணவியின் செல்போனை ஆய்வு செய்ய சென்னையில் உள்ள தடவியல் துறைக்கு அனுப்ப பட்டு உள்ளது. இந்த விசாரணை தங்கள் முன்பு மேற்கொள்ளவேண்டும் என பாத்திமாவின் தந்தை லத்தீப் டிஜிபி யிடம் மனு அளித்து இருந்தார்.
இதன் அடிப்படையில் விசாரணையின் முன்பு ஆஜர் ஆக வேண்டும் என லத்தீப் அவரது மகள் அஹிஷா விற்கும் உயர்நிதிமன்றம் சம்மன் அனுப்பியது. இதனால் இருவரும் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜர் ஆகினர்.