சென்னை கோயம்பேட்டில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சருமான சுப்பிரமணியன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் 18 வயது முதல் 44 வயது வரையில் இருப்பவர்களுக்கு நோய் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதேபோல பொது மக்களுக்கு நேரடியாக வீடுகளுக்கே சென்று தடுப்பூசியை செலுத்தும் பணி நடந்துகொண்டிருக்கிறது. மலை கிராமங்களில் வசித்து வரும் மக்களுக்கு அவர்களுடைய வீட்டிற்கு சென்று நோய் தடுப்பூசியை செலுத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழக முதலமைச்சர் மற்றும் மற்ற மாநில முதலமைச்சர்கள் வைத்த கோரிக்கையை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக் கொண்டதன் விளைவாக, இலவச நோய் தடுப்பூசி குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். நோய் தொற்று காரணமாக, போடப்பட்ட ஊரடங்கு சிறிதுசிறிதாக தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு குறைக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்திருக்கின்றார்.
நோய்த்தொற்று பரவல் குறைந்து கொண்டே இருப்பதால் மாநில வருவாய் துறை மதுபான கடைகளை திறப்பதற்கு கோரிக்கை வைத்திருக்கின்றது. அதனடிப்படையில் மதுபானக்கடைகள் தற்சமயம் திறக்கப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்திருக்கின்றார். நோய்த்தொற்று பரவல் தற்சமயம் குறைந்து வருகின்றது. இந்த நோய்த் தொற்று பரவல் உச்சத்தில் இருக்கும் சமயத்தில் ஒயின்ஷாப் புகழ் அனைத்தும் மூடி வைக்கப்பட்டு தான் இருந்தன என்று தெரிவித்திருக்கின்றார்.
ஆனால் அத்தியாவசிய தேவைகள் பலவற்றை தொடங்காமல் குறிப்பாக ஒயின் சார்புகளை மட்டும் பிறப்பதற்கு காரணம் என்ன என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். நோய்த் தொற்று பரவல் காரணமாக, போடப்பட்ட உரங்களில் அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள் மற்றும் தேநீர் கடைகள், முடி திருத்துபவர்கள் உள்ளிட்ட பல முக்கிய தொழிலாளர்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
அவர்களுக்கெல்லாம் ஒரு தீர்வை கொடுக்காமல் நோய்த்தொற்று நிவாரண நிதி என சொல்லிக்கொண்டு நான்காயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு அவர்களுடைய வாழ்வியல் பிரச்சனையை பற்றி சிந்திக்காமல் அவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் விதமாக அவர்களுக்கான தளர்வுகள் எதையும் அறிவிக்காமல் இருக்கிறது. ஆனால் மதுபான கடைகளை மட்டும் திறப்பதற்கு உத்தரவிட்டு இருக்கிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.