கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவக்காற்று காரணமாக மேற்குத் மலைத்தொடர் பகுதிகளில் கன மழை பெய்து வருகின்றது.அவலாஞ்சியில் மட்டும் நேற்று 58 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது.அதற்கு முந்திய நாள் 30 சென்டி மீட்டருக்கு மேல் மழை பதிவானது.
இந்நிலையில் சென்னை வானிலை மையம் சற்று முன் வெளியிட்ட செய்திக் குறிப்பில்
தென்மேற்கு பருவகாற்று, மேற்கு தொடர்ச்சி மலையில் மேலும் தீவிரம் அடைந்துள்ளதால் நீலகிரி மாவட்டத்தின் மலைச்சரிவு பகுதிகளில் பலத்த காற்றுடன் கன மழை பெய்யும் என்றும்,கோவை தேனி உள்ளிட்ட மலைப்பகுதி மாவட்டங்களில் கனமானது முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும்,திருப்பூர், திண்டுக்கல், நெல்லை,தென்காசி,விருதுநகர் தூத்துக்குடி,கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல்
மிதமானதுவரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.