இங்கிலாந்து அணி தடுமாற்றம்

0
194
இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நேற்று முன்தினம் தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்தது தொடக்கத்தில் தடுமாறினாலும் பாபர் அசாம் அரைசதம் அடித்து அணியை சரிவில் இருந்து மீட்டார். அதன் பின்னர் ஆன்டேர்சன் பந்தில் அவுட் ஆனார். அபாரமாக ஆடிய ஷான் மசூத் 156 ரன்களில் எல்.பி.டபிள்யூ. ஆனார். முடிவில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 109.3 ஓவர்களில் 326 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட், ஜோப்ரா ஆர்ச்சர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 92 ரன்களுக்கு 4 விக்கட்டுடன் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவடைந்தது.
Previous articleஇப்படி செய்தால் சாம்பார் இரண்டு நாட்கள் ஆனாலும் கெடாது!!பிரிட்ஜ் தேவை இல்லை!
Next articleமக்களே முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து கொள்ளுங்கள்?இந்த 10 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here