இன்று சென்னையில் மழை பொழிவு எப்படி இருக்கும்?

0
101

வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் பரவலாக பெய்த போதிலும் சென்னைக்கு இன்னும் இயல்பான மழை கிடைக்கவில்லை.
சென்னைக்கு குடிநீர் வழங்ககூடிய ஏரிகளில் நீர் மட்டம் உயர்ந்து வரும் போதிலும் இன்னும் முழுமையான கொள்ளளவை எட்டவில்லை. ஆனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
வளிமண்டலத்தின் மேலடுக்கில் சுழற்சி காரணமாக தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், உள் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலத்தின் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை ஆகிய உள் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னையில் சில இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும். என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

Previous articleசீன விஞ்ஞானிகளின் முயற்சியால் குரங்கு-பன்றிக்கு பிறந்த வித்தியாசமான விலங்கு
Next articleநடத்த வேண்டும் அதிமுக! வெற்றி வேண்டும் பாமக! நிறுத்த வேண்டும் திமுக