ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் சென்னை அணி வீரர்!! இது தான் எனது கடைசி போட்டி என உருக்கம்!!
இன்று நடைபெறும் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியுடன் பிரீமியர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் அம்பத்தி ராயுடு அவர்கள் தெரிவித்துள்ளார்.
நேற்று அதாவது மே 28ம் தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக சென்னை அணி வீரர் அம்பத்தி ராயுடு அவர்கள் தெரிவித்திருந்த நிலையில் நேற்று பேட்டி நடைபெறாததால் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியுடன் அவர் ஓய்வு பெறவுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருந்த அம்பத்தி ராயுடு அவர்கள் இந்திய அணிக்காக மொத்தம் 55 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 3 சதங்கள் 10 அரைசதம் அடித்து மொத்தம் 1694 ரன்கள் எடுத்துள்ளார்.
உள்ளூர் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 2010 முதல் 2017ம் ஆண்டு வரை விளையாடினார். பிறகு 2018ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஏல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவரை ஏலத்தில் எடுத்தது. 2018ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக அம்பத்தி ராயுடு இருந்தார். சென்னை அணிக்காக முதல் சீசனில் அம்பத்தி ராயுடு சிறப்பாக செயல்பட்டார். 2018ம் ஆண்டு சீசனில் 16 போட்டிகளில் விளையாடிய அம்பத்தி ராயுடு அவர்கள் 602 ரன்கள் குவித்தார். இதையடுத்து 2022ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் இவரை ஏலத்தில் எடுத்தது.
இந்த சீசனில் 11 போட்டிகளில் விளையாடியுள்ள அம்பத்தி ராயுடு அவர்கள் 139 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதையடுத்து இன்றுடன் அனைத்து வித கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு குறித்து அம்பத்தி ராயுடு அவர்கள் “மும்பை, சென்னை என இரண்டு சிறப்பான அணிகளுக்காக விளையாடியது பெருமையாக உள்ளது. இரண்டு அணிகளுக்காகவும் 14 சீசன், 11 முறை பிளே ஆப் 204 போட்டிகள் 8 பைனல்களில் விளையாடி 5 கோப்பை வென்றது என்று பிரீமியர் பயணம் சிறப்பாக அமைந்தது. குஜராத் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியுடன் விடைபெறவுள்ளேன். இது தான் என்னுடைய கடைசி போட்டி. எனக்கு வாய்ப்பு கொடுத்த அரைவருக்கும் நன்றி. என்னுடைய முடிவை திரும்பப் பெற மாட்டேன்” என்று கூறியுள்ளார்.