தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பில் சென்னை முதலிடம்..!!

0
185

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,38,055 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் சென்னை முதலிடத்தில் உள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 1,196 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,16,650 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், நேற்று ஒரே நாளில் 1,009 பேர் கொரோனா தொற்றால் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார். இதனால் குணமடைந்து வீடு திரும்பினார் எண்ணிக்கை 1,02,698 ஆக அதிகரித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் நேற்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 22 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதுவரை சென்னையில் மட்டும் 2,454 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

சென்னையில் இன்றைய தேதியில் 11,498 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், நேற்று ஒரே நாளில் 11,375 பேருக்கு கொரேனா பரிசோதனை நடத்தப்பட்டதாகவும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Previous articleசெம்பருத்தி சீரியலில் ஏற்பட்ட திடீர் மரணம்!
Next articleநீட் மற்றும் ஜேஇஇ தேர்வு தொடர்பான வழக்குகழுக்கு உச்ச நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here