விரைவில் தலைநகர் எங்கள் வசப்படும்! ஜெயக்குமார் ஆருடம்!

0
139

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பாக விருப்ப மனு விநியோகம் கடந்த 26-ஆம் தேதி ஆரம்பித்து நேற்று முடிவடைந்தது சென்னை ராயபுரம் இடியப்ப நாயக்கர் பள்ளி அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விருப்ப மனுவை தாக்கல் செய்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததாவது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அதிமுகவைச் சேர்ந்தவர்கள் எழுச்சியுடன் மனுக்களை வழங்கி வருகிறார்கள். இதனை கவனிக்கும் போது ஒரு மகத்தான வெற்றியை அதிமுக பெறும் என தோன்றுகிறது. சென்னை மிக விரைவில் அதிமுகவின் கோட்டை ஆக மாறும் என்பது தெளிவாகிறது. தேர்தலை சுதந்திரமாக அமைதியான நேர்மையான முறையில் தேர்தல் ஆணையம் நடத்த வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

மிக விரைவில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது. சென்னையில் இருக்கின்ற பல்வேறு சிறு கால்வாயில் இருக்கின்ற தண்ணீரை பெரு கால்வாய் மூலமாக எடுத்துச் சென்றிருந்தால் அந்த தண்ணீர் கடலுக்கு சென்று இருக்கும் இந்த 16 கால்வாய்களை தூர் வாரி வைத்து இருந்திருந்தால் வெள்ளத்தின் மூலமாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலை ஏற்பட்டிருக்காது என தெரிவித்திருக்கிறார்.

எங்களைப் பொறுத்த வரையில் பொது மக்கள் பிரச்சினைகளுக்கு எப்போதும் துணை நிற்போம் அதுதான் நாங்கள். ஆரம்பத்தில் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என நாங்கள்தான் போராட்டம் செய்தோம், பொய்யான வாக்குறுதிகளை வழங்கியது திமுக மக்கள் பிரச்சனைகளுக்கு போராட என்றும் எங்கள் இயக்கம் தயங்காது என்று தெரிவித்திருக்கிறார்.

Previous articleதொடரும் கனமழை! எந்த மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை?
Next articleசென்னையில் புதிய திட்டத்தை இன்று தொடங்கி வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்!