அகழாய்வு பணியில் கீழடிக்கு அடுத்ததாக சென்னிமலை பகுதி : அகழாய்வில் கண்டுபிடிப்பு

Photo of author

By Parthipan K

தமிழகத்தில் கீழடியில் நடந்துவரும் அகழ்வாராய்ச்சியை போன்று, சென்னிமலைலும் பெரிய அளவில் தமிழர்களின் பண்டைய கால பொருட்கள் கண்டு எடுக்கப்பட்டு வருகின்றது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே நடந்துவரும் அகழ்வாராய்ச்சியில் பெரிய அளவிலான முதுமக்கள் தாலிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கண்டெடுக்கப்பட்ட தாழியில் இருந்த எலும்புகள் ஆய்வுக்காக மதுரை கொண்டு செல்லப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள கொடுமணல் கிராமத்தை சேர்ந்த பகுதியில் 2300 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் மற்றும் பல்வேறு பொருட்கள் அளவு பணியின்போது கிடைக்கப்பட்ட வருகின்றது. தற்பொழுது இந்திய தொல்லியல் துறையினர் தொகையின் திட்ட இயக்குனர் ரஞ்சித் தலைமையில் ,உதவி தொல்லியளர் நந்தகுமார், தொல்லியல் வல்லுநர் சுப்பிரமணியம் ஆகியோர் மேற்பார்வையில், கடந்த நான்கு மாதமாக சென்னிமலையில் ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றது.

சென்னிமலை அகழாய்வின் பணியில், பண்டைய கால தமிழர்களின் அணிகலன்கள், தொழிற்சாலைகள், செம்பு மற்றும் வெள்ளி நாணயங்கள், சூதுபவளம் ,கல்மணிகள் மண் குவளை , சிறிய கத்தி ,மஞ்சாடி உள்ளிட்ட பல பொருட்களை கண்டெடுத்துள்ளனர். தற்பொழுது, கல்லறையிலிருந்து பகுதியில் ஆய்வு செய்தபோது, பெரிய அளவிலான 3 முதுமக்கள் தாழிகள் மண்ணில் புதைந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 15-ஆம் தேதி பொது மக்கள் பயன்படுத்திய தாலியை, கீழடி அகழ்வாராய்ச்சி கண்டுபிடிக்கப்பட்ட புதுச்சேரி பல்கலைக்கழக ஓய்வுபெற்ற பேராசிரியர் ராஜன் தலைமையில் கண்டெடுக்கப்பட்டது. தற்பொழுது புதிதாக கண்டெடுக்கப்பட்ட தாழியில் , மனிதர்களின் உடைந்த மண்டைஓடுகள் கை கால் எலும்புகள் உள்ளிட்டவை இருந்துள்ளனர்.கண்டெடுக்கப்பட்ட மாதிரிகளை டிஎன்ஏ ஆராய்ச்சிக்காக ஆய்வுக்குழுவினர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆய்வுக்கூடத்தில் பத்திரமாக எடுத்துச் சென்றுள்ளனர்.

இந்த ஆய்வின் மூலம் எலும்புகள் யாரோடு தொடர்புடையது என்பதை கண்டுபிடிக்க இயலும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்பொழுது இந்த பகுதியில் செங்கற்கள் மூலம் கட்டப்பட்ட தொழில் கூடம் ஒன்றை கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த ஆராய்ச்சி பணிகள் வருகின்ற 30-ஆம் தேதியுடன் நிறைவு பெறும் என இந்திய தொழில்துறையினர் இயக்குனர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.