சத்தீஸ்கர் மாநிலம் மூன்று முறை தீபாவளி கொண்டாடப் போகிறது!!! உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் பேட்டி!!!

0
120
#image_title

சத்தீஸ்கர் மாநிலம் மூன்று முறை தீபாவளி கொண்டாடப் போகிறது!!! உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் பேட்டி!!!

சத்தீஸ்கர் மாநிலம் அடுத்தடுத்து மூன்று முறை தீபாவளிப் பண்டிகையை கொண்டாட போகின்றது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

சத்தீஸ்கர் உள்பட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகின்றது. மேலும் கட்சிகள் தேர்தலுக்கான வேலைகளை செய்து வருகின்றன.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் மாதம் 7ம் தேதியும் 17ம் தேதியும் என்று இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி நடைபெற்று அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து சத்தீஸ்கர் மாநிலத்தில் தேர்தல் பணிகளில் கட்சிகள் ஈடுபட்டு வரும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் சத்தீஸ்கர் மாநிலம் மூன்று முறை தீபாவளி பண்டிகையை கொண்டாடப்படவுள்ளது என்று கூறியுள்ளார்.

பாஜக கட்சி சார்பாக சத்தீஸ்கர் மாநாட்டு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் கலந்து கொண்டு பேசினார். அப்போது “சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் மாதத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜக கட்சியை நீங்கள் மீண்டும் வெற்றி பெற வைக்க வேண்டும். அவ்வாறு வெற்றி பெற்று பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் நக்சல்களை முழுவதுமாக அழித்துவிடுவோம்.

மேலும் நடக்கவிருக்கும் சத்தீஸ்கர் சட்டமன்ற தேர்தலில் பாஜக கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் பொழுது சத்தீஸ்கர் மாநிலம் தீபாவளி பண்டிகை கொண்டாடும். இரண்டாவது முறையாக நவம்பர் மாதத்தில் வரும்தீபாவளிப் பண்டிகையை சத்தீஸ்கர் மாநிலம் கொண்டாடும்.

மூன்றாவது முறையாக அயோத்தி ராமர் கோயில் திறக்கும் பொழுது மூன்றாவது முறையாக சத்தீஸ்கர் மாநிலம் தீபாவளி கொண்டாடும். ஆகவே சத்தீஸ்கர் மாநிலம் மூன்று முறை தீபாவளிப் பண்டிகையை கொண்டாடவுள்ளது” என்று அந்த மாநாட்டில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் கூறியுள்ளார்.

Previous articleலியோ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா!!!
Next articleஅடுத்தடுத்து சர்ப்ரைஸ் கொடுக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி!!! வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழையும் 2 பிரபலங்கள்!!!