அக்காலத்தில் உறவினர்கள் வீட்டுக்கு வந்தால் நாட்டுக்கோழியை அடித்து அறுசுவை உணவு வழிங்கிய விருந்தோம்பல் இருந்தது. இதற்கு முக்கிய காரணம்
நாட்டுக்கோழிகள் எந்த மருந்தும் இன்றி புழு பூச்சிகள் செடிகளைத் உண்டு
இயற்கையாக வளர்வதால் நிறைய சத்துக்களை பெற்றுள்ளது.இதனை நாம் உணவாக உட்கொள்ளும் பொழுது நமக்கு நம் உடலுக்கும் அந்த சத்துக்கள் கிடைக்கும்.நாட்டுக்கோழி சாப்பிடுவதால் நம் உடலில் ஏற்படும்பல விதமான பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக அமைகிறது. இதனாலையே நாட்டுக்கோழி அடித்து விருந்தோம்பல் செய்யும் முறை தமிழர்கள் பண்பாட்டில் இருந்து வந்தன.நாட்டுக் கோழி சாப்பிடுவதால் எந்த விதமான பிரச்சனைகளுக்கு தீர்வு என்பதனை பற்றி இந்த பதிவில் காணலாம்.
நாட்டுக் கோழி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்?
பூப்பெய்திய பெண்கள் நாட்டுக்கோழியை உண்பதால் இடுப்பு எலும்புகள் பலம் பெற்று மாதவிடாயின்போது ஏற்படும் வலிகளும் குறையும்.
நாட்டுக்கோழி உண்பதால் நம் உடலில் உள்ள அதிகபடியான வெப்பம் அதாவது உடல் சூடு குறைந்து உடல் குளிர்ச்சியடையும்.
வலுவற்று இருக்கும் ஆண்களுக்கு இந்த நாட்டு கோழியை உணவாக கொடுக்கும்போது அவர்களின் எலும்புகள் வலிமை பெற்று அவர்கள் வலிமையாக இருப்பர்
நாட்டுக் கோழி உண்பதால் நுரையீரல் பிரச்சனைகளிலிருந்து விடு. பெறலாம். சுவாச கோளாறுகள் உள்ளவர்கள் இதனை உட்கொண்டால் சுவாசம் சீர்படும்.
நெஞ்சு சளி உள்ளவர்களுக்கு மிளகு சேர்த்து நாட்டுக்கோழி ரசம் வைத்து கொடுத்தால் தீராத நெஞ்சுச் சளியும் தீர்ந்துவிடும்.
புதுமண தம்பதிகளுக்கு நாட்டுக்கோழி கொடுப்பதன் மூலம் அவர்களின் தாம்பத்திய உறவு பலம் பெறும்.
பலநாள் நோய்வாய்ப்பட்ட அவர்களுக்கு நாட்டுக்கோழியை கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு நல்ல வலிமை கிடைக்கும்.