இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தலைமைத் தேர்தல் ஆணையர் நியமனம்!

Photo of author

By Mithra

இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தலைமைத் தேர்தல் ஆணையர் நியமனம்!

Mithra

Anup Chandra Pandey

இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தலைமைத் தேர்தல் ஆணையரை மத்திய அரசு நியமித்துள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையராக இருந்த சுனில் அரோரா கடந்த ஏப்ரல் 12ம் தேதி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அந்த இடம் காலியாக இருந்தது. இந்நிலையில், புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக அனூப் சந்திர பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருடன் சேர்த்து மூன்று பேர் கொண்ட குழு அடுத்த ஆண்டு உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடத்த உள்ளது. இந்தக் குழுவில் தேர்தல் ஆணையர்கள் சுஷில் சந்திரா மற்றும் ராஜீவ் குமார் ஆகியோர்  உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.

அனூப் சந்திர பாண்டே உத்தரப்பிரதேசத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சியில் தலைமைச் செயலாளராக பணியாற்றியுள்ளார். 1984ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான இவர், 2019ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். தற்போது தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள அனூப் சந்திர பாண்டே, மூன்று ஆண்டுகள் பணிபுரிவார் என்றும், 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஓய்வு பெறுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.