பொறுப்பை ஏற்க பிரிவு உபசார விழாவை தவிர்த்து புறப்பட்ட தலைமை நீதிபதி!

Photo of author

By Hasini

பொறுப்பை ஏற்க பிரிவு உபசார விழாவை தவிர்த்து புறப்பட்ட தலைமை நீதிபதி!

Hasini

Chief Justice departed to accept responsibility

பொறுப்பை ஏற்க பிரிவு உபசார விழாவை தவிர்த்து புறப்பட்ட தலைமை நீதிபதி!

மேகாலயா ஐகோர்ட்டுக்கு சென்னை ஐகோர்டின் தலைமை நீதிபதி மாற்றப்பட்டார். இந்த உத்தரவை பலர் எதிர்த்து வேறு பரிசீலனை செய்ய பலர் வலியுறுத்தினர். இந்நிலையில் மேகாலயாவிற்கு மாற்றப்பட்ட சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி பிரிவு உபச்சார விழாவையும் தவிர்த்துவிட்டு சாலை மார்க்கமாக கொல்கத்தா புறப்பட்டுச் சென்றார்.

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வில் இன்று வழக்குகள் பட்டியலிடப்பட்டு இருந்த நிலையில், சென்னையில் இருந்து கொல்கத்தாவுக்கு உடனடியாக புறப்பட்டுள்ளார். இவரை இடமாற்றம் செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு மூத்த வழக்கறிஞர்கள் பலர் கடிதம் எழுதியிருந்தனர். எனினும் தனது முடிவை கொலிஜியம் திரும்பப் பெறாததால், மேகாலயா ஐகோர்ட்க்கு மாற்ற ஜனாதிபதி ராம்நாத் ஒப்புதல் அளித்துள்ளார். அதன் காரணமாக அவர் பிரிவு உபச்சார விழாவில் கூட கலந்து கொள்ளாமல் மேகாலயாவில் தனது பணியை தொடர புறப்பட்டுவிட்டார்.