திடீரென போராட்டத்தில் குதித்து இருக்கும் அண்ணாமலை!

0
114

கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ள சேத பாதிப்புகளை பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை பார்வையிட்டார்.

அதற்கு முன்னதாக அவர் விமானம் மூலமாக இன்று காலை தூத்துக்குடி வந்தடைந்தார், அப்போது அவர் நிருபர்களிடம் தெரிவித்ததாவது மழை வெள்ள பாதிப்பு காரணமாக, தமிழக அரசு விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்குவதாக தெரிவித்து இருக்கிறது.

முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சமயத்தில் நிவர் புயலால் உண்டான சேதங்களுக்கு ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

அந்த இடத்தில் இந்த தொகை மிகவும் குறைவு தான் என தெரிவித்திருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சமயத்தில், விவசாயிகளை நண்பர்களாக பார்த்த திமுக அரசு தற்சமயம் இவ்வளவு குறைவான தொகையை அறிவித்து இருக்கிறது  இது விவசாயிகளிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆகவே இந்த நிவாரணத் தொகையை கூடுதலாக வழங்க வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலின் தற்சமயம் எப்படி பார்க்கிறார் என்று தெரியவில்லை எனக் கூறியிருக்கிறார் அண்ணாமலை.

தமிழக முதலமைச்சர் மழை வெள்ள பாதிப்பு உள்ளிட்டவற்றை பார்வையிடுவதை சுற்றுலா பயணம் போல செய்துவருகிறார் மழை வெள்ள பாதிப்பு உள்ளிட்டவற்றை பார்வையிட செல்லும் முதலமைச்சர் விவசாய நிலங்களில் இறங்கி முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். அப்போதுதான் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க அது ஒரு வாய்ப்பாக இருக்கும் என கூறியிருக்கிறார்.

ஸ்ரீரங்கம் ஆலயத்தில் கருத்தியல் மண்டபத்தில் அமர்ந்து மற்றொருவர் சொற்பொழிவை கேட்பதற்கு எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் உரை ஒளிபரப்பானது தொடர்பாக, அரசு அதிகாரிகள் மீது வழக்கு தொடர்வது சரியாக இருக்காது. தைரியம் இருந்தால் என் மீது வழக்கு தொடரப்படும் என சவால் விடுத்து இருக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த 11 மாவட்டங்களில் இருக்கக்கூடிய பொதுமக்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் விதமாக, நாளை மறுநாள் 11 மாவட்டங்களில் எங்கள் கட்சி சார்பாக போராட்டம் நடத்த இருக்கிறோம் என கூறியிருக்கிறார்.

திமுக பெட்ரோல் விலையை 5 ரூபாய் குறைப்பதாக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துவிட்டு, 3 ரூபாய் மட்டுமே குறைத்து இருக்கிறது. பாஜக மட்டுமல்லாமல் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் விலை குறைக்கப்பட்ட சூழ்நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் இதுவரையில் குறைக்கப்படவில்லை. ஆகவே அதனை வலியுறுத்தி எதிர்வரும் 22 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்திருக்கிறார் அண்ணாமலை.