தமிழ்நாட்டில் பள்ளி கல்லூரிகளை இப்போது திறக்கலாமா அல்லது தள்ளி வைக்கலாமா என்பது சம்பந்தமாக முதலமைச்சருடன் அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டு இருக்கிறார்கள் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ்குமார், உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா, மற்றும் உயர்கல்வித் துறை அதிகாரிகள், ஆகியோர் கலந்து கொண்டனர்.
கொரோனா தொற்றினை தடுக்கும் வகையில் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்து வருகின்றது.
இப்போது அமலில் இருக்கும் தரவுகளுடன் கூடிய ஊரடங்கு சென்ற மாதம் முடிவடைந்தது. அதனை தொடர்ந்து, ஊரடங்கை இந்த மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.
அதோடு தமிழக அரசு பள்ளிக்கூடங்களில், வரும் 16ஆம் தேதி முதல் 9 , 10 ,11 ,12 ஆகிய வகுப்புகளுக்கு வகுப்புகள் தொடங்கப்படும் என்றும், அதே போல கல்லூரிகளுக்கும் வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பதற்கு இப்போது சரியான நேரம் இல்லை என்று, திமுக உள்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆசிரியர் சங்கங்களும் கருத்து தெரிவித்து இருக்கின்றனர்.
இந்த நிலையில், கல்லூரிகள் பள்ளிகள் ஆகியவற்றை திறப்பது சம்பந்தமாக, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், ஆகியோருடன் ஆலோசனை செய்தார்.
நோய்த்தொற்றின், பரவல் மற்றும் பருவ மழையை பற்றி யோசித்து கல்லூரிகள், பள்ளிகள், ஆகியவற்றை திறப்பதில் ஒரு மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒருசில தினங்களில் வெளிவரலாம் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.