தமிழக மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…! விஜயதசமி வாழ்த்து…!

Photo of author

By Sakthi

விஜயதசமி மற்றும் ஆயுத பூஜை ஆகிய பண்டிகைகள் நாளைய தினம் கொண்டாடப்பட இருப்பதை தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கின்றார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் வாழ்த்து குறிப்பில் விஜயதசமி மற்றும் ஆயுத பூஜை நன்னாளை மகிழ்ச்சியுடனும் ஒற்றுமையுடனும் கொண்டாடவிருக்கும் உலக தமிழ் மக்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் தமிழக மக்கள் அனைவரும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ்வில் பல வெற்றிகளை அடைந்து சிறப்போடும் சீரோடும் வாழ்ந்திட வேண்டும் வாழ்வில் ஏற்றம் பெறுவதற்கான ஆற்றல் கல்வி செல்வம் ஆகிய மூன்றும் இன்றியமையாத ஒன்று என்று தெரிவித்திருக்கின்றார்.