முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை..! பண்டிகையை முன்னிட்டு மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படுமா..?? எதிர்பார்ப்பில் பொதுமக்கள்..!!

0
220

தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது குறித்து வரும் 28ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டன. இதையடுத்து பொது மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், நாட்டின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டும் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகளை அறிவித்து வந்தது. வரும் 31ம் தேதியுடன் தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு முடியயுள்ள நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் 28ம் தேதி காலை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் மற்றும் மாலை மருத்துவ நிபுணர் குழுவுடனும் மேலும் தளர்வுகள் அறிவிப்பது குறித்து காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். இதில் தியேட்டர்கள் திறப்பு, சென்னை புறநகர் ரயில் சேவை, பள்ளிகள் திறப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பண்டிகை காலம் நெருங்கி வருவதால் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Previous articleதமிழக மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…! விஜயதசமி வாழ்த்து…!
Next articleஇந்தியாவில் குறைந்து வரும் கொரோனா தொற்றின் தாக்கம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here