சசிகலாவிற்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டிய விவகாரம்! சி.வி.சண்முகம் ஆவேச பேட்டி!

Photo of author

By Sakthi

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் நான்கு ஆண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலா நான்கு ஆண்டு சிறை தண்டனை முடிவடைந்ததைத் தொடர்ந்து, சென்ற 27 ஆம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலை பெற்றார். ஆனாலும் சிறையில் இருந்த சமயத்தில் சசிகலாவுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் சசிகலா பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றைய தினம் அவர் அந்த மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார்.

இந்த நிலையில், அதிமுகவை சேர்ந்த சில நிர்வாகிகள் சசிகலாவிற்கு ஆதரவாக பல இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டுவது, முகநூல் பதிவை பதிவு செய்வது, போன்ற வேளைகளில் ஈடுபட்டு வந்தார்கள் .அவர்களெல்லாம் அந்தக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் முதற்கொண்டு எல்லா பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் நேற்றையதினம் பத்திரிக்கையாளர்களை சந்தித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி .சண்முகம் அவர்களிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது அந்த சமயத்தில் அந்த கேள்விக்கு பதில் தெரிவித்த அவர்,எங்கள் கட்சியினர் அவரை வரவேற்கும் விதமாக சுவரொட்டிகளை ஒட்டுவது ஒரு பெரிய விஷயமாக எனக்குத் தெரியவில்லை .நான் தெரிவித்தால் நாளையே சசிகலாவிற்கு எதிராக ஒரு லட்சம் பேர் சுவரொட்டிகளை ஓட்டுவதற்கு தயாராக இருக்கிறார்கள் என்று ஆவேசமாக பேசி இருக்கின்றார்.

சிறையிலிருந்து விடுதலையான சசிகலா தமிழகம் வந்தபோது அவருடைய காரில் அதிமுகவின் கொடி பறக்க விடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.