எடப்பாடியார் எடுத்த அதிரடி முடிவு! திகைப்பில் எதிர்க்கட்சியினர்!

0
116

தமிழகத்தில் இருக்கின்ற அரசியல் கட்சிகள் அனைத்தும், எதிர்வரும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்காக தயாராகி வரும் நிலையில், திமுக தரப்பில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்து நடத்தி வருகிறார்கள். அதிமுக தரப்பில் இதுவரை எந்த தேர்தல் பணிகளும் ஆரம்பிக்கப்படவில்லை ஆனாலும் அந்த கட்சியினர் ரகசியமாக சில வேலைகளை செய்து வருகிறார்கள்.

அதிமுக தரப்பில் இந்த தேர்தலில் வேட்பாளர் தேர்விற்கு மிக அதிக முக்கியத்துவம் தரப்போகிறார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. மக்களிடம் நற்பெயர் இருக்கும் இளம் தலைமுறை வேட்பாளர்களுக்கு அதிகமான வாய்ப்புகள் கொடுக்கப்படும் என்று தெரிகின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக உளவுத்துறையும், அந்தந்த தொகுதியில் யாரை வேட்பாளராக அறிவித்தால் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும், என்று ஒரு அறிக்கையை முதல்வர் இடத்தில் கொடுத்திருப்பதாக சொல்கிறார்கள்.

எல்லா வகையிலும், தகுதியுடைய வேட்பாளர்களை அனைத்து தொகுதிகளிலும், நிறுத்த வேண்டும் என்ற காரணத்தால், முதல்வர் மிகவும் கடுமை காட்டி வருகின்றார். சிபாரிசுகளை ஓரம் கட்டவும் திட்டமிட்டு இருக்கிறார். என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக திமுக தரப்பு திகைப்பில் இருப்பதாக சொல்கிறார்கள்.

Previous articleமாநில அளவில் ட்ரெண்டிங் ஆன எடப்பாடியார்!
Next articleவன்னியர் இட ஒதுக்கீடு விவகாரம்! அதிமுக அரசுக்கு பாமக வைத்த செக்!