2 நாட்களில் 3 மாவட்டங்களுக்கு சுற்று பயணம்! முதலமைச்சரின் முழு பயணத் திட்டம் இதோ!

0
160

சென்னை விமான நிலையத்திலிருந்து தனி விமானத்தின் மூலமாக திருச்சிக்கு செல்லும் முதல்வர் ஸ்டாலின் காட்டூர் அரசு ஆதிதிராவிடர் பெண்கள் பள்ளிக்கு செல்லவிருக்கிறார். அங்கே புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டவும், கணினி மற்றும் அறிவியல் ஆய்வகங்கள் கட்டவும் அடிக்கல் நாட்டவிருக்கிறார்.

அத்துடன் மாணவர்களின் நலன் கருதி அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய ஸ்டீம் திட்டத்தை ஆரம்பித்து வைக்கிறார். இதனையடுத்து பெரம்பலூர் மாவட்டம் எறையூருக்கு வருகை தரும் முதலமைச்சர், அங்கு இருக்கின்ற சர்க்கரை ஆலையின் புதிய அலகையும் ஆரம்பித்து வைப்பதுடன் சிப்காட்டிற்கு அடிக்கல் நாட்டவிருக்கிறார்.

இவற்றை முடித்துக் கொண்டு அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம், மாளிகை மேடு உள்ளிட்ட பகுதிகளில் அகழாய்வு பணிகள் நடைபெறுகின்றன, அவற்றையும் முதலமைச்சர் பார்வையிடுகிறார். நாளைய தினம் அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்று பல நலத்திட்ட உதவிகளை அவர் வழங்குகிறார்.

Previous articleமின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைத்து விட்டீர்களா? இன்று முதல் நடைபெறுகிறது சிறப்பு முகாம்!
Next articleபுதுக்கோட்டை அருகே அழகிய நிலையில் கிடந்த இளம் பெண் சடலம்! தீவிர விசாரணையில் காவல்துறையினர்!