திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளை எல்லோரும் மனதார பாராட்டி வருகிறார்கள். அதிலும் நோய் தடுப்பு பணிகள் பொருளாதார ஆலோசனை தீர்வு உள்ளிட்ட நடவடிக்கைகள் மிகப்பெரிய பாராட்டை பெற்று இருக்கின்றன.
தமிழகம் புதிய அரசியல் வரலாற்றை நோக்கி சென்று கொண்டிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள் கடந்த ஆட்சிக்காலத்தில் திமுக மீது வைக்கப்பட்ட குற்றச்சாற்றுக்களை இப்போது இந்த முறை வந்து விடக்கூடாது என்பதிலும் அவர் மிகவும் கவனமாக உள்ளார்.
அம்மா உணவகம் அதே பெயரில் செயல்பட அனுமதி வழங்கியது, 65 லட்சம் கொடுத்த பைகளில் இருக்கின்ற ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி புகைப்படங்கள் இருக்கட்டும் என்று ஸ்டாலின் தெரிவித்தது, உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அதேநேரம் முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்றதில் இருந்து சாலை ஓய்வின்றி பணியாற்றி வருகிறார் என்று சொல்லப்படுகிறது. சரியாக மருந்து மாத்திரைகள் கூட அவர் எடுத்துக் கொள்வதில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. ஒரு மணி அளவில் எல்லாம் தமிழக முதலமைச்சர் தொலைப்பேசியில்
பேசுவதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்திருக்கிறார்.
சட்ட சபையில் உரையாற்றிய அமைச்சர் முதலமைச்சர் ஸ்டாலின் எப்போது உறங்குகிறார் என்று தெரியவில்லை. அமைச்சர்களுக்கும் கூட தெரியவில்லை இரவு ஒரு மணி அளவில் போன் வருகிறது. 24 மணி நேரமும் உழைத்து கொண்டிருக்கிறார் முதலமைச்சர் என்று கூறியிருக்கிறார் அமைச்சர்