இந்திய கடற்படையின் செயல் வருத்தம் அளிக்கிறது! பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

0
171

தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறையைச் சார்ந்த பத்து மீனவர்கள் விசைப்படகில் தெற்கு மன்னார் வகையுடா கடல் பகுதியில் ஒன்றாக சேர்ந்து மீன்பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய கடற்படை தவறுதலாக துப்பாக்கிச் சூடு நடத்தியது.

இதில் படகில் இருந்த மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த மீனவர் வீரவேல் படுகாயம் அடைந்துள்ளார். மீனவருக்கு மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு நடுவே இந்திய கடற்படையால் சுடப்பட்ட மீனவர் வீரர்களுக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

இந்த நிலையில், தமிழக மீனவர்கள் இந்திய கடற்படையால் சுடப்பட்ட விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் இந்திய கடற்படையினரின் செயல் மிகுந்த வருத்தமளிக்கிறது.

இந்திய கடல் பகுதியில் மீன் பிடிக்கும் இந்திய மீனவர்களை இந்திய பாதுகாப்பு முகமை நிதானத்துடன் கையாள வேண்டும். இந்திய பாதுகாப்பு படை நிதானத்துடன் செயல்பட வேண்டும். இதற்காக இந்திய கடற்படைக்கு சரியான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். என்று முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Previous articleதீபாவளி பண்டிகை கொண்டாட காரணமான நரகாசுரன் யார்? அவருடைய வரலாறு இதோ!
Next articleராணுவ வீரர்களோடு தீபாவளி பண்டிகையை கொண்டாடும் பிரதமர் மோடி! வெளியான தகவல்