முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலை துபாய் பயணம்! எதற்காக தெரியுமா?

Photo of author

By Sakthi

தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்து 10 மாதங்கள் நிறைவு பெற்றிருக்கின்றன. இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முதல் முறையாக வெளிநாட்டு பயணம் மேற்கொள்கிறார். அவர் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

துபாயில் நடைபெறும் சர்வதேச கண்காட்சியில் 192 நாடுகள் பங்கேற்கின்றன மத்திய அரசு சார்பாக அங்கு அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றன தமிழக அரசு சார்பிலும் கைத்தறி, விவசாயம், போன்ற அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த சூழ்நிலையில், துபாய் கண்காட்சியில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலை 4 மணியளவில் சிறப்பு விமானம் மூலமாக புறப்பட்டு செல்கிறார் என சொல்லப்படுகிறது.மேலும் அவருடன் எம்.எம். அப்துல்லா உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் பயணம் செய்யவிருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த பயணத்தின் போது துபாய் கண்காட்சியில் தமிழ்நாடு சார்பாக அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை திறந்து வைப்பதுடன் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு சர்வதேச நிறுவனங்களுக்கு அழைப்பு விடுப்பார் என்று சொல்லப்படுகிறது.

இந்த கண்காட்சியின் போது பல நாடுகளின் நிறுவனங்களுடன் இணைந்து தொழில் தொடங்குவது குறித்த ஒப்பந்தங்களும் கையெழுத்தாகிறது என்று சொல்லப்படுகிறது. அதோடு 28ம் தேதி அபுதாபியில் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது. 4 நாட்கள் துபாயில் தங்கியிருக்கும் அவர் அதன்பிறகு சென்னை திரும்புகிறார் என்றும் சொல்லப்படுகிறது.