ஜெயிலர் படத்தின் சக்சஸ்… இயக்குநர் நெல்சனை வாழ்த்திய முதல்வர் முக.ஸ்டாலின்… இணையத்தில் புகைப்படங்கள் வைரல்!!

0
36

ஜெயிலர் படத்தின் சக்சஸ்… இயக்குநர் நெல்சனை வாழ்த்திய முதல்வர் முக.ஸ்டாலின்… இணையத்தில் புகைப்படங்கள் வைரல்…

 

ஜெயிலர் திரைப்படம் வெற்றி பெற்றதை அடுத்து வாழ்த்து தெரிவித்து பாராட்டிய முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களுக்கு இயக்குநர் நெல்சன் திலீப்குமார் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்.

 

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இந்த திரைபபடத்தில் இந்திய சினிமாவின் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

 

அனிருத் ரவிச்சந்தர் ஜெயிலர் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சன்பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக கலாநிதி மாறன் அவர்கள் இந்த படத்தை தயாரித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜெயிலர் திரைப்படம் வெளியானதை அடுத்து  ரசிகர்கள் மத்தியில் ஜெயிலர் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது.

 

இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படம் வெளியான முதல் நாளில் உலக அளவில் 95. 78 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஜெயிலர் திரைப்படம் வெளியான முதல் நாளில் 29.46 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

 

இந்நிலையில் ஜெயிலர் திரைப்படத்தை முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் பார்த்துவிட்டு இயக்குநர் நெல்சன் திலீப்குமார் அவர்களை அழைத்து பாராட்டியுள்ளார். இதையடுத்து முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களுக்கு இயக்குநர் நெல்சன் திலீப்குமார் அவர்கள் எக்ஸ் பக்கத்தில் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

 

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் பதிவிட்டுள்ள அந்த பதிவில் “ஜெயிலர் திரைப்படத்தை பார்த்துவிட்டு உத்வேகம் அளிக்கக் கூடிய வகையில் பாராட்டிய முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களுக்கு மிக்க நன்றி. உங்களது வார்த்தைகளால் படக்குழுவினர் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர்” என்று பதிவிட்டுள்ளார். ஜெயிலர் படத்தின் வெற்றிக்காக நடிகர் விஜய் அவர்கள் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் அவர்களை போனில் அழைத்து வாழ்த்துக்களும் பாராட்டுகளும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.