இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி… ஜப்பானை வீழ்த்தி அபார வெற்றி!!

0
35

இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி… ஜப்பானை வீழ்த்தி அபார வெற்றி…

 

சென்னையில் நடைபெற்று வரும் ஆசிய சேம்பியன்ஸ் ஹாக்கி தொடரின் ஏழாவது சீசனின் இறுதிப் போட்டிக்கு இந்திய ஹாக்கி அணி முன்னேறி உள்ளது.

 

சென்னை எழும்பூரில் 2023ம் ஆண்டுக்கான ஆசிய சேம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில்  இந்தியா ஹாக்கி அணி ஜப்பான் ஹாக்கி அணியை எதிர் கொண்டது.

 

நேற்று(ஆகஸ்ட்11) நடைபெற்ற ஆசிய சேம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின் அரையிறுதி போட்டியில் ஜப்பான் ஹாக்கி அணியை வீழ்த்தி 5-0 என்ற கோல் கணக்கில் இந்திய ஹாக்கி அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

 

இந்திய ஹாக்கி அணியூ சேர்ந்த வீரர்கள் ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 5 கோல்கள் அடித்தனர். இதனால் இந்திய ஹாக்கி அணி 5-0 என்ற வித்தியாசத்தில் அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

 

முன்னதாக நடந்த மற்றொரு அரையிறுதிப் போட்டியில் நடப்பு சேம்பியன் தென்கொரியாவை வீழ்த்தி அரையிறுதிப் போட்டியில் 6-2 என்ற கோல் கணக்கில் அரேயிறுதி போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

 

இந்தியா ஹாக்கி அணி மற்றும் மலேசியா ஹாக்கி அணிகள் மோதும் இறுதிப் போட்டி இன்று(ஆகஸ்ட்12) இரவு 8.30 மணிக்கு சென்னை எழும்பூர் இராதாகிருஷணன் மைதானத்தில் நடைபெறுகின்றது.