சிங்கப்பூர் சென்றுள்ள முதல்வர் முக.ஸ்டாலின்! இன்று மாலை முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்பு!!

Photo of author

By Sakthi

சிங்கப்பூர் சென்றுள்ள முதல்வர் முக.ஸ்டாலின்! இன்று மாலை முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்பு!

சிங்கப்பூர் சென்றுள்ள தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் அவர்கள் அங்கு இன்று(மே 24ம் தேதி) மாலை நடக்கவிருக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிங்கப்பூர் சென்றுள்ள முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் அங்கு இருக்கும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றார். இந்த ஆலோசனையில் சிங்கப்பூர் அமைச்சர்கள் ஈஸ்வரன், சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று அதாவது மே 23ம் தேதி முதல்வர் முக.ஸ்டாலின் அவ்கள் சிங்கப்பூர் சென்றடைந்தார்.

சிங்கப்பூர் சென்றுள்ள முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களது திட்டப்பணிகள் இன்று காலையில் இருந்தே தொடங்கியது. சிங்கப்பூர் பயணததின் முதல்கட்டமாக சிங்கப்பூர் முன்னணி தொழில் நிறுவனங்களின் அதிகாரிகளை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.

இதையடுத்து இன்று மாலை 4 மணியளவில் சிங்கப்பூரில் நடக்கவிருக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் பங்கேற்கவுள்ளார். இந்த மாநாட்டில் 350 தொழில் நிறுவனங்களை சேர்ந்த முக்கிய அதிகாரிகள் இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர். இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் கிடைக்கும் முதலீடுகள் அடுத்த வருடம் ஜனவரி மாதம் தமிழ்நாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.