காவிரி குண்டாறு நதி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த முதலமைச்சர்!

0
207

காவிரி குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்தை கர்நாடக மாநிலத்தின் கோரிக்கையை பரிசீலிக்குமாறு அதிகாரிகளுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டிருப்பதாக அந்த மாநிலத்தின் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்திருக்கிறார்.

தென்மாநிலங்களில் முதலமைச்சர்கள் மாநாடு உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் கடந்த 14ஆம் தேதி அதாவது நேற்றுமுன்தினம் நடந்தது. இதில் கர்நாடக முதல் அமைச்சர் பசவராஜ் நம்மை உட்பட தென் மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றார்கள் மாநாட்டை முடித்துக்கொண்டு அன்று இரவு ஆந்திர மாநிலம் திருப்பதியில் கர்நாடக மாநில முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை தங்கினார்.

அதன்பிறகு நேற்று காலை அவர் திருமலை வெங்கடேச பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பாக வரவேற்பு வழங்கப்பட்டது. அங்கேயே சாமி தரிசனத்தை முடித்துவிட்டு அவர் நேற்று மதியம் தனி விமானம் மூலமாக பெங்களூரூவிற்கு வந்தார். அந்த சமயத்தில் அவர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்தார் அப்போது அவர் தெரிவித்ததாவது,

ஆந்திர மாநிலம் திருப்பதியில் தென்மாநிலங்களில் முதலமைச்சர்கள் மாநாடு வெற்றிகரமாக நடந்தது. இதில் பல பிரச்சினைகள் தொடர்பாக தீர்வு காணப்பட்டன. மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு உட்பட இன்னும் சில பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருக்கின்றன. தமிழ்நாட்டில் காவிரி, குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்தை தமிழக அரசு முடிவு செய்து இருக்கிறது. இதற்கு ஆட்சேபனை தெரிவித்து இருக்கிறேன் என கூறியிருக்கிறார் பசவராஜ் பொம்மை.

அந்த திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கு முன் பார்த்ததே காவிரியில் உபரி நீர் பங்கீடு செய்யப்பட வேண்டும் என உரையாற்றினேன். இதனை ஆனால் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறேன். இதனை தொடர்ந்து மத்திய அமைச்சர் அமித்ஷா இந்த விவகாரத்தில் கர்நாடக அரசின் கோரிக்கையை பரிசீலனை செய்ய வேண்டும் என ஜல் சக்தி துறைக்கு உத்தரவிட்டிருக்கிறார் என தெரிவித்திருக்கிறார் கர்நாடக முதல்வர்.

கிருஷ்ணா நதிநீர் பங்கீடு விவகாரத்தில் நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன் இதனை பரிசீலிப்பதாக அவர் தெரிவித்தார். இதை தவிர மற்ற நதிநீர் பிரச்சினைகள் தொடர்பாகவும் உரையாற்றினேன் மேற்கு ரயில்வே துறைக்கு சொந்தமான நிலத்தை கொடுப்பது மீனவர்களுக்கு ஆதார் அட்டை வழங்குவது உள்ளிட்டவற்றை உரையாற்றினேன்.

மேகதாது தொடர்பாக நான் உரையாற்றினேன் ஆனால் தமிழக முதலமைச்சர் வருகை தரவில்லை, இதனால் அவர்கள் இது தொடர்பாக பேசவில்லை. நாங்கள் ஜல்சக்தி துறை அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம் இதற்கு மிக விரைவில் தீர்வு காணப்படும். இந்த காவிரி பிரச்சனை சுதந்திரத்திற்கு முன்பு இருந்தே இருந்து வருகிறது கர்நாடக மாநிலத்தில் காவிரி குறித்து எந்தத் திட்டம் செயல்படுத்தினாலும், தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது என கூறியிருக்கிறார் பசவராஜ் பொம்மை.

அரசியல் நோக்கங்களுக்காக கர்நாடகா கொண்டு வரும் திட்டங்களை அவர்கள் எதிர்க்கிறார்கள். அதேபோல தமிழக அரசு முன்னெடுக்கும் திட்டங்களையும் கர்நாடக அரசு எதிர்த்து வருகிறது. இதில் ஒரு நியாயமான தீர்வு ஏற்படவேண்டும். அதைத்தான் நான் செய்கின்றேன் பெங்களூரு வெளி வட்டச் சாலை திட்டத்தில் ஒரு சில மாற்றங்களை செய்திருக்கின்றோம் அதனை விரைவில் செயல்படுத்த இருக்கிறோம் என கூறியிருக்கிறார்.

பிட்காயின் விவகாரத்தில் ஏதாவது ஆதாரங்கள் கிடைத்தால் அதனை காவல்துறையினரிடம் காங்கிரஸ் கட்சியினர் வழங்க வேண்டும். இதில் காங்கிரஸ் அரசியல் செய்து வருகிறார்கள், இதில் வேறு ஒன்றும் அவர்களுடைய நோக்கமாக இல்லை என பசவராஜ் பொம்மை தெரிவித்திருக்கிறார்.

Previous articleஅறிவுடையோருக்கு ஆண்டியும் அரசனும் ஒன்றுதான்!
Next articleகோவையில் இரண்டு பேருக்கு ஏற்பட்ட பன்றி காய்ச்சல்! 13 பேருக்கு தீவிர பரிசோதனை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here