நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் நிவாரணம்! ஒரு லட்சம் வழங்க உத்தரவு

0
220
#image_title
நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் நிவாரணம்! ஒரு லட்சம் வழங்க உத்தரவு.
தமிழகத்தில் கடந்த வாரம் நீரில் மூழ்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு நிவாரண தொகை வழங்கி தனது இரங்கலையும் தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.
சேலம் மாவட்டம், கன்னங்குறிச்சி தாமரைநகர் என்ற இடத்திலுள்ள புது ஏரியில் 22-4-2023 அன்று குளிக்கச் சென்ற கன்னங்குறிச்சி கிராமம். கோவிந்தசாமி காலனியைச் சேர்ந்த பிரசாந்த் (வயது 17) மற்றும் பாலாஜி, (வயது 16) ஆகிய இரண்டு மாணவர்களும் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற வேதனையான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்.
இதேபோல் கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம் வி குமாரமங்கலம் கிராமம் பெரியகாலனியைச் சேர்ந்த தினேஷ் (வயது 14) மற்றும் இன்பரசன் (வயது 8) ஆகிய இருவரும் 23-4-2023 அன்று அதே கிராமத்திலுள்ள ஏரியில் குளிக்கச் சென்றபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியினையும் கேட்டு மிகவும் வேதனையடைந்தேன்.
உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 1 லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். என இன்று வெளியிட்ட அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Previous articleஉலக டெஸ்ட் சாம்பியன் போட்டி! ரஹானே தேர்வு 
Next articleஅரசு பள்ளியில் பாலியல் தொல்லை! ஆசிரியர் கைது