அடிப்படை புரிதலில்லாமல் கருத்து தெரிவித்த முதலமைச்சர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்! அண்ணாமலை அதிரடி!

0
111

சற்றேறக்குறைய மூன்று ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இது தொடர்பாக பலர் நீதிமன்றங்களின் கதவுகளைத் தட்ட நீதிமன்றம் போட்ட உத்தரவின் அடிப்படையில், தேர்தல் ஆணையம் இந்த தேர்தலுக்கான பணிகளை தொடங்கியது.ஆகவே வேட்புமனு தாக்கல் செய்து தற்சமயம் அனைத்து அரசியல் கட்சிகளும் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

எதிர்வரும் 19ஆம் தேதி தமிழகத்திலிருக்கின்ற 21 மாநகராட்சிகள் மற்றும் 138 நகராட்சிகளில் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் முதல் நிலை பேரூராட்சி தவிர்த்து 489 பேரூராட்சிகள் என்று மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்த சூழ்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சி மற்றும் 11 பேரூராட்சிகளில் பாஜக சார்பாக போட்டியிடும் 116 வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டம் குன்னூர் வி.பி. தெருவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்பதற்காக சென்றிருந்தார். அதில் பங்கேற்று கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.

அதற்குப் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது, ஹிஜாப் விவகாரத்தில் பொதுவெளியில் வேண்டுமானால் ஹிஜாப் அணியலாம் ஆனாலும் பள்ளி வளாகங்களில் எந்த மதமாக இருந்தாலும் கட்டாயமாக அந்த சீருடையை மட்டுமே அணிய வேண்டும்.

அதோடு மதத்தை வைத்து பாஜக ஒருபோதும் அரசியல் செய்யாது. இஸ்லாமியர்களாகட்டும், கிறிஸ்துவர்களாகட்டும், யாராகயிருந்தாலும் அருகில் வைத்துக் கொள்வோம் என்று தெரிவித்திருக்கிறார்.

அதோடு மேற்கு வங்க மாநில ஆளுநர் சட்டமன்றத்தை முடக்கிய விவகாரத்தை எதிர்த்து தமிழக முதலமைச்சர் வலை தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில் ஆளுநர் இரக்கமில்லாமல் தவறு செய்ததாகவும், மாநில அரசியலில் தலையீடு செய்வதாகவும் முதலமைச்சர் குற்றம்சாட்டியிருந்தார். மாநில அரசும், மாநில அரசின் அமைச்சகமும் எடுக்கும் முடிவையே ஆளுநர் எடுத்திருக்கிறார் என்ற புரிதலில்லாமல் அவசரப்பட்டு தமிழக முதலமைச்சர் எதற்காக வலைத்தளத்தில் பதிவிட வேண்டும்?

இதுபோன்று மத்திய அரசை வம்புக்கிழுக்கும் தமிழக முதலமைச்சர் தமிழக மக்களுக்கு நன்மை செய்வதாக தெரியவில்லை. இதற்காக தமிழக முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

Previous articleஅடப்பாவமே கழிவறை கதவு என நினைத்து விமானத்தின் கதவை திறக்க முயன்ற பயணி! காபி கோப்பையால் அடித்த விமான பணியாளர் நடுவானில் பரபரப்பு!
Next articleநகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் வேட்பாளர்களுக்கு கிடுக்குப்பிடி போட்ட தேர்தல்! ஆணையம் அதிரடி உத்தரவு!