நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் வேட்பாளர்களுக்கு கிடுக்குப்பிடி போட்ட தேர்தல்! ஆணையம் அதிரடி உத்தரவு!

0
75

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் எதிர்வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கிறது. பலர் நீதிமன்ற கதவுகளை தட்டிய பிறகு நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், இந்த தேர்தலுக்கான ஏற்பாடுகளை தமிழக தேர்தல் ஆணையம் செய்தது.

அதனடிப்படையில், வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது தற்சமயம் வேட்பாளர்கள் அனைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், தற்சமயம் தேர்தல் ஆணையம் தேர்தல் பரப்புரை தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதனடிப்படையில் எதிர்வரும் வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்யக்கூடாது என்று தடை விதித்திருக்கிறது தேர்தல் ஆணையம்.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் ஆட்சித் தலைவர்களுக்கு அனுப்பிய அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, தேர்தல் நடத்தை விதிகளின் அடிப்படையில் அரசியல் கட்சிகளின் தேர்தல் பொதுக்கூட்டங்களில் மற்றும் மற்ற பிரச்சாரங்கள் அனைத்தையும் வாக்குப்பதிவு முடிவுறும் நேரத்திலிருந்து 48 மணி நேரத்திற்கு முன்பாக கண்டிப்பாக நிறுத்த வேண்டும் என்று தெரிவித்திருக்கிறது.

அதனடிப்படையில், தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் மற்ற பிரச்சாரங்கள் என்று அனைத்தையும் வரும் 17ஆம் தேதி அன்று மாலை 6 மணிக்கு மேல் முன்னெடுக்கக் கூடாது என்பதை அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர்கள், உள்ளிட்டோரை கேட்டுக் கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.