விஜய்-யின் தடாலடி பேச்சு!! முதல்வர் ஸ்டாலின் பதிலடி!!

Photo of author

By Sakthi

DMK-TVK:திமுக மீது தவெக தலைவர் விஜய் வைத்த விமர்சனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின் .

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழக கட்சியை தொடங்கினார். அக் கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரத்தில் நடைபெற்றது. இதில் அக் கட்சியின் அரசியல் எதிர் திமுக தான் என்று வெளிப்படையாக கூறினார். மேலும் ஆளும் திமுக அரசு மீது கடுமையான விமர்சனங்களை வைத்தார்.

மேலும் தவெக செயற்குழு கூட்டத்தில் திமுக அரசு எதிர்ப்பு தீர்மானங்கள் அக் கட்சியினரால் நிறைவேற்றப்பட்டது . தற்கு பல அரசியல் தலைவர்கள் எதிர்ப்பும் ,ஆதரவும் தெரிவித்தனர். அந்த வகையில் முதலமைச்சர் கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விஜய்க்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

அதில் புதிதாக கட்சி தொடங்குபவர்கள் திமுக அழியவேண்டும் ,ஒழிய வேண்டும் என நினைக்கிறார்கள்.என்றும், 3 ஆண்டுகளாக திமுக பல சாதனைகளை செய்து வருகிறது. மக்கள் திமுகவை நம்பி வாக்கு அளித்துள்ளார்கள் அதை நாங்கள் காப்பாற்றி வருகிறோம்.

மேலும் திமுக அரசின் வளர்ச்சியை பிடிக்காமல் புதிய கட்சி தொடங்குபவர்கள் திமுகாவை விமர்சனம் செய்கிறார்கள் எனக் கூறினார். அடுத்தப்படியாக மக்களுக்கு பணிபுரியவே நேரம் பத்தவில்லை என்றும் இதனால் விமர்சனங்களை கண்டு கொள்வதில்லை என்று கூறினார்.

இப்படியாக ஒரே வரியில் பேரறிஞர் அண்ணா சொல்வதை போல “வாழ்க வசவாளர்கள்” அதைத்தான் நான் கூற விரும்புகிறேன் என்று கூறினார்.