உச்சக்கட்ட கோபத்தில் முதல்வர் ஸ்டாலின்! இனி ஒன்லி ஆக்ஷன் தான்..அமைச்சர்களுக்கு போட்ட அதிரடி உத்தரவு!
அமைச்சர்கள் அனைவரும் தலைமைச் செயலகத்திற்கு வந்து அவர்களது பணிகளை காண வேண்டும். ஆனால் அமைச்சர்களோ முதல்வர் இருந்தால் மட்டுமே தலைமைச் செயலகம் வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். முதல்வர் அல்லாத நாட்களில் தலைமைச் செயலகம் பக்கம் கூட எட்டிப் பார்ப்பதில்லை. இதனால் பல பைல்கள் முடிக்கப்படாமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளனர்.
இது குறித்து அங்குள்ள அதிகாரிகள் ஸ்டாலினிடம் குறை கூறியுள்ளனர்.அமைச்சர்கள்,பெண்கள் என பலரை அவதூறாக பேசிய நிலையில் இவர் கண்டித்த போதிலும் அதனை கண்டு கொள்ளாத நிலையில் தற்பொழுது தலைமைச் செயலகம் வராததும் இவருக்கு கோபத்தை உண்டாக்கியுள்ளது. இதனையடுத்து அவ்வபோது முதல்வர் அலுவலகத்தில் இருந்து சில அதிகாரிகள் அமைச்சர் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு அவர்கள் இருக்கிறார்களா என்பதை உறுதி செய்து வருகின்றனர்.
அவ்வாறு விசாரணை செய்யும் பொழுது ஒரு சில அமைச்சர்கள் மட்டுமே தலைமைச் செயலகத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் முதல்வர் அமைச்சர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இனி வாரத்தில் நான்கு நாட்கள் தலைமை செயலகம் வர வேண்டும் எனக் கூறியுள்ளார். மேலும் வருகை கண்காணிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் அமைச்சர்கள் மத்தியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. அமைச்சர்கள் அவ்வப்போது தலைமைச் செயலகத்திற்கு வந்து அவர்களது வேலையை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.