டெல்டா மாவட்டங்களில் இன்று ஆய்வு செய்யும் முதலமைச்சர் ஸ்டாலின்!

Photo of author

By Sakthi

டெல்டா மாவட்டங்களில் இன்று ஆய்வு செய்யும் முதலமைச்சர் ஸ்டாலின்!

Sakthi

Updated on:

டெல்டா மாவட்ட விவசாயிகளை சந்தித்து மழை சேத விபரங்கள் தொடர்பாகவும், நிவாரண பணிகள் தொடர்பாகவும், முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கேட்டறிய உள்ளார் சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று ஐந்து நாட்களாக ஆய்வு செய்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

குடியிருப்பு பகுதிகளில் தேங்கி இருக்கக்கூடிய மழைநீரை விரைந்து வெளியேற்றவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவை பிறப்பித்தார் 6வது தினமாக நேற்றைய தினம் சென்னை தேனாம்பேட்டையில் நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கான மருத்துவ முகங்களை அவர் தொடங்கி வைத்தார் அதன் பிறகு செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வு செய்தார் வண்டலூர் தாலுகாவில் வசிக்கும் இருளர் பழங்குடி இனத்தைச் சார்ந்த 33 குடும்பங்களுக்கு கீழகொட்டையூர் கிராமத்தில் இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார். முகாமில் தங்கி இருப்போருக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களையும் வழங்கினார்.

அதோடு ஆய்வுக்கு சென்ற வழியில் கீழ் கோட்டையூரில் இருக்கின்ற டீக்கடையில் டீ குடித்து பொதுமக்களிடம் கலந்துரையாடினார். காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூர் அடையாறு ஆறு ஆரம்பிக்கும் இடம் மண்ணிவாக்கம் பகுதி அடையாறு பாலத்தில் கனமழையின் காரணமாக, ஏற்பட்டிருக்கக் கூடிய நீர்வரத்தை ஆய்வு செய்தார், முடிச்சூர் சிஎஸ்ஐ செயின்ட் பள்ளியில் இருக்கக்கூடிய நிவாரண முகாம் மற்றும் மருத்துவ முகாமை ஆய்வு செய்தார் அங்கிருந்து வெளியே வந்த சமயத்தில் முதலமைச்சரிடம் அந்த பகுதி மக்கள் எங்கள் ஊரை காப்பாற்றுங்கள் என்று கேட்டார்கள் அவர்களுக்கு ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து விட்டு சென்றார்.

தாம்பரம் பேருந்து நிலையத்தில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டதுடன் தூய்மை பணியாளர்களிடம் தேவைப்படும் உதவிகளை கேட்டறிந்தார் முதலமைச்சருடன் அமைச்சர்கள் அன்பரசன் மா சுப்பிரமணியன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் சென்றிருந்தார்கள் ஆய்வு பணி முடிவடைந்த பின்னர் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் காரில் புதுச்சேரி புறப்பட்டுச் சென்றார்.

இன்று காலை 7.30 மணி அளவில் கடலூர் மாவட்டம் அரங்க மங்கலம், அடூர், அகரம், காலை 9.30 மணி அளவில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பகுதிகளுக்கு செல்ல இருக்கின்றார், வெள்ள நீரில் மூழ்கிய பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்ய இருக்கிறார். பாதிப்புகள் தொடர்பாக விவசாயிகளிடமும் நேரடியாக கேட்டறிய உள்ளார். காலை 11.30க்கு நாகப்பட்டினம் மாவட்டம் அருந்தவபுரம், திருவாரூர் மாவட்டம், ராயநல்லூர், உறுதி குடி மாலை 3.30 மணி அளவில் தஞ்சாவூர் மாவட்டம் பெரியகோட்டை, பகுதிகளை பார்வையிட இருக்கின்றார் முதலமைச்சர் இரவு அவர் சென்னை திரும்ப இருப்பதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது.