ஜெயலலிதா வழியில் முதல்வர் ஸ்டாலின்.. அதிரடி மாற்றம்? குழப்பத்தில் மக்கள்!!
தமிழகத்தில் கடந்த கால ஆட்சியான செல்வி.ஜெயலலிதா தலைமையில் உருவான ஆட்சியில் தமிழக மக்களுக்கு பல நன்மைகளை செய்த காலத்தில் கூட அ.தி.மு.கவில் உள்ள பல அமைச்சர்கள் தூக்கம் இல்லாமல் மனதில் ஒருவித பயத்துடனே இருந்தனர். அதற்க்கு காரணம் செல்வி.ஜெயலலிதா அவர்கள் 2011 மற்றும் 2014 ஆட்சி காலங்களில் அடிக்கடி அமைச்சர்களை மாற்றி வந்தார்.
இதனால் பல அமைச்சர்கள் இரவில் தூங்குவதற்கு முன்பும் காலையில் எழுந்த பின்பும் தனது பதவி இருக்கிறதா? என்று செய்தி பார்த்து தான் அடுத்த வேலைகளை பார்க்க தொடங்குவார்கள். ஏனென்றால் தனது வசதிக்காகவும் அவ்வப்போது அமைச்சர்களையும் உயர் அதிகாரிகளையும் மாற்றி வந்தார்.
மேலும் சட்டபேரவையில் நன்றாக பேசுவர்களையும் எதிர்கட்சியான தி.மு.க வையும் விமர்சனம் செய்து நன்றாக பேசுபவர்களையும், ஏன் புது சட்டமன்ற உறுப்பினர்களை கூட அமைச்சர்களை ஆக்கிய பெருமை ஜெயலலிதாவையே சாரும்.அந்த பாணியில் தான் தற்போது நடைபெற்று வருகிற தி.மு.க. அரசு இப்போது அமைச்சர்களை மாற்றி மக்களை அதிர்ச்சியடை வைத்து வருகின்றனர்.
ஸ்டாலின் தற்போது நன்றாக செயல்பட்டு வந்த நிதி அமைச்சரான பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்களை மாற்றினார்.மேலும் தமிழக அமைச்சரவையில் தொடர்ந்து 4 நாட்களுக்குள் மிக பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டது. பழனிவேல் தியாகரஜனை மாற்றி தங்கம் தென்னரசு அவர்களை புதிய நிதி அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் டி.ஆர்.ராஜாவுக்கு தொழில் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜன் அவர்களை மாற்றி தொழில்நுட்ப துறை அமைச்சராக பதவி கொடுத்துள்ளனர்.
ஸ்டாலின் தலைமையில் உருவான ஆட்சி இரண்டே ஆண்டுகள் ஆகிய இந்த நிலையில் இத்தையக மாற்றத்தை மக்கள் எதிர்ப்பார்க்கவில்லை. மேலும் ஐ.டி. துறை அமைச்சராக இருந்த மனோஜ் தங்கராஜ் தற்போது பால்வள துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் அமைச்சர் சாமிநாதன் தமிழ்வளர்ச்சி துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த சூழ்நிலையில் அமைச்சர் மட்டுமல்லாது அதிகாரிகளை கூட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.முதலமைச்சரின் முதன்மை செயலாளராக இருந்த உதயசந்திரன் தற்போது நிதித்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஊரக வளரச்சிதுறை செயலாளர் அமுதா, தற்போது உள்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.மேலும் இதேபோன்று பல அதிகாரிகளை தனது வசதிக்காகவும் மேற்பட்ட பணிகளை விரைந்து செயல்படுத்தும் விதமாகவும் பல மாற்றங்களை செய்து வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
அதன்படி தமிழ்நாடு தலைமை செயலாராக இருந்த இறையன்பு கடந்த கால ஆட்சியில் எந்த வித பணியிலும் இல்லாமல் ஒதுக்கப்பட்டு இருந்தார். தி.மு.க ஆட்சி காலத்தில் தான் இறையன்பு அவர்களை தலைமை செயலாளராக பணி அமர்த்தபட்டுள்ளார்.இந்த நிலையில் இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்கள் பனிக்காலம் முடியும் தருவாயில் அடுத்த தலைமை செயலாளராக யாரை அமர்த்துவது ? என்று லிஸ்டை எடுத்து வருகிறாராம் ஸ்டாலின்.
எதற்க்கு இந்த திடீர் மாற்றம் என்று அலசும் போது வருகிற 2024 லோக்சபா தேர்தலையும், 2026 சட்டமன்ற தேர்தலையும் மனதில் கொண்டு தீவிரமாக பணிகளை செயய்வதற்காக பலவித மாற்றங்கள் செய்து வருகிறார் என கூறுகின்றனர்.