News

போராளியின் வழியில் தொடரும் வெற்றி பயணம்!

Photo of author

By Sakthi

போராளியின் வழியில் தொடரும் வெற்றி பயணம்!

Sakthi

Button

முன்னாள் அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார் கருணாநிதியின் 98வது பிறந்தநாளை முன்னிட்டு மெரினா கடற்கரையில் இருக்கின்ற அவருடைய நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர் துரைமுருகன், டி ஆர் பாலு, கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் போன்ற திமுக முக்கிய நிர்வாகிகளும் மரியாதை செலுத்தி இருக்கிறார்கள். கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு 38 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை கடற்கரையில் தொடங்கிவைத்தார் முதலமைச்சர். 38 மாவட்டங்களிலும் வனத் துறை சார்பாக ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படுகின்றன முன்கள பணியாளர்களுக்கு மளிகை பொருட்கள் உள்ளிட்ட உதவிகளையும் வழங்கினார் ஸ்டாலின்.

இதற்கிடையில் கருணாநிதியின் 98வது பிறந்தநாளை முன்னிட்டு போராளியின் வழியில் தொடர் வெற்றிப் பயணம் என்று சென்னை மெரினா கடற்கரையில் இருக்கின்ற கருணாநிதியின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது.

பொது இடங்களில் இனி இவையெல்லாம் செய்தால் அபராதம்! மாநகராட்சியின் புது திட்டம்!

பயனர்களை வாட்ஸ் அப்! கட்டாயப்படுத்துகிறது ! டெல்லி அரசு !

Leave a Comment