பாஜக அமைச்சருக்கு முதல்வர் தொலைப்பேசி அழைப்பு! இந்த காரணத்திற்காக தானா?

பாஜக அமைச்சருக்கு முதல்வர் தொலைப்பேசி அழைப்பு! இந்த காரணத்திற்காக தானா?

தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தாலனது முடிந்து இரு மாதங்கள் தான் ஆகிறது.இந்நிலையில் மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை மாநில அரசு செய்து வருகிறது.மத்திய அரசும் பலவித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.தற்போது பிரதமர் நரேந்திரமோடி புதிதாக கூட்டுறவு அமைச்சகத்தை உருவாக்க உள்ளார்.முதலில்இந்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் முன்னே முன்னாள் அமைச்சர்களை விளக்கி விட்டு புதிய அமைச்சர்கள் அமர்த்தப்படுவார் என பல பேச்சுக்கள் பேசப்பட்டு வந்தது.அதுமட்டுமின்றி இந்த கூட்டுறவு அமைச்சகம் மாநிலம் முழுவது செயல்பட்டு வருகிறது.இது அரசாங்கத்திற்கும் நல்ல வருமானத்தை ஈட்டி தருகிறது.

அதுமட்டுமின்றி முந்தைய அமைச்சரவையில் இருந்த அனைவரும் பாஜக கட்சி சார்ந்தவர்கள்.இதர கட்சிகளுக்கு எந்தவித வாய்ப்பையும் தரவில்லை.அதனால் தற்போதைய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது.இவ்வாறு விரிவாக்கம் செய்யப்படும் அமைச்சரவையில் புதிதாக அமைச்சர்களுக்கு வாய்புகள் வழங்கப்பட்டுள்ளது.அதில் தமிழ்நாட்டை சேர்ந்த மத்திய இணை அமைச்சராக எல்.முருகன் தேர்வாகியுள்ளார்.இவருக்கு மீன்வளத்துறை,தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை,கால்நடை மற்றும் பால் வளத்துறை ஆகியவை இவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய இணையமைச்சராக எல்.முருகன் தேர்வு செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அவருக்கு தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு பாராட்டுக்களை தெரிவித்தார்.மேலும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, மாண்புமிகு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் அமைச்சரவை விரிவாக்கத்தில் சகோதரர் திரு. எல்.முருகன் அவர்கள் மாண்புமிகு மத்திய அமைச்சராக பதவியேற்றதில் மகிழ்ச்சியடைகிறேன். புதிய அத்தியாயத்தில் அடியெடுத்து வைத்துள்ள நீங்கள் மக்கள் பணியில் சிறந்து விளங்க என் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

Leave a Comment