திமுக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு சங்கங்களில் அடகு வைத்து இருக்கும் நகைகளுக்கு வட்டி உட்பட அனைத்து விதமான தொகைகளையும் தள்ளுபடி செய்வதாக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தது.
ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு இதில் ஒரு சில மாற்றங்களை கொண்டுவந்தது அதாவது ஐந்து வாரங்களுக்கு மேல் நகைகளை அடகு வைத்து இருப்பவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்படாது என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் இந்த கூட்டுறவு சங்க வங்கிகளில் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் ஊழல்களை செய்திருக்கிறார்கள் ஆகவே எல்லோருக்கும் நகை கடன் தள்ளுபடி வழங்க முடியாது என்று அறிவித்து இருந்தது திமுக அரசு.
இந்த சூழ்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்ட 40கிராமுக்குள்ளான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்ய படுவதாக தமிழக அரசு நேற்று முன் தினம் அறிவித்திருக்கிறது.சுமார் 6000ம் கோடி மதிப்பிலான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்திருக்கிறது தமிழக அரசு.
இதுகுறித்து திண்டுக்கல்லில் நேற்றைய தினம் பத்திரிக்கையாளர்களை சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி தெரிவித்திருக்கிறார். அதாவது அரசு கடன் சுமையில் இருந்தாலும் கூட்டுறவு நகைக்கடன்களை தள்ளுபடி செய்திருக்கிறது.இது மாநில அரசின் சாதனை என தெரிவித்திருக்கிறார். அத்துடன் தள்ளுபடி செய்ய பட்ட நகைகள் அனைத்தும் அவரவர் வீட்டிற்கே வந்துவிடும் இதுதான் முதல்வர் மக்களுக்கு கொடுத்த தீபாவளி பரிசு என தெரிவித்திருக்கிறார். கூட்டுறவு நகைக்கடன்களில் முறைகேடு புரிந்தவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது. என கூறியிருக்கிறார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர் கொடைக்கானல் பகுதியில் கூட்டுறவு சங்கங்கள் தொடர்பாக முழுமையாக அறிந்துகொள்ளும் விதத்தில் கூட்டுறவு பயிற்சி கல்லூரி அமைய இருக்கிறது.இந்த வருடம் முதல் மாணவர்கள் சேர்க்கைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூறியிருக்கிறார்.
அதேபோல முல்லைப்பெரியாறு அணை உரிமையை தமிழக அரசு விட்டுக்கொடுக்கவில்லை இது குறித்து துரைமுருகன் தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கிறார்.அதோடு 2 நாட்களில் அணையை பார்வையிட அவர் நேரில் செல்லவுள்ளார் என தெரிவித்திருக்கிறார்.