கோட்டையில் முதல்முறையாக தேசியக்கொடி ஏற்றிய ஸ்டாலின்! சுதந்திர தினக் கொண்டாட்டம்!

Photo of author

By Parthipan K

கோட்டையில் முதல்முறையாக தேசியக்கொடி ஏற்றிய ஸ்டாலின் சுதந்திர தினக் கொண்டாட்டம்!

நாடு முழுவதும் இன்று 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்முறையாக மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக் கொண்டார்.
சுதந்திர தின உரையை முதல் முறையாக நிகழ்த்தினார் அவர்.அந்த உரையில் தனக்கு இந்த நல்ல வாய்ப்பினை தந்த தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்தார் அவர்.தமிழ்ச்சமூகம் சிந்தனையால்,பண்பாட்டால்,நாகரிகத்தால்,பழக்க வழக்கங்களால் முன்னேற வேண்டும்.அதற்கு ஏற்றத்தாழ்வற்ற ஒருமனித உரிமைச் சமூகமாக மாற்ற வேண்டும் என்றும் கூறினார்.அனைத்து மாநில முதலமைச்சர்களும் தேசியக் கொடியை ஏற்றும் வாய்ப்பைப் பெற்றுத் தந்தவர் முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி என்று கூறி இந்த உரையில் பல திட்டங்களையும் அவர் அறிவித்தார்.
சுதந்திர போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் 17000 ரூபாயிலிருந்து 18000 ரூபாயாக உயர்த்தி அவர் அறிவிப்பை வெளியிட்டார்.மகாத்மா காந்தி ஆறு முறை தமிழ்நாட்டிற்கு வந்துள்ளதாகக் கூறிய அவர் காந்திக்கு மரியாதை செலுத்தும் விதமாக மதுரையில் உள்ள மகாத்மா காந்தி அருங்காட்சியகம் ஆறு கோடி ரூபாய் செலவில் நவீன முறையில் புதுப்பிக்கப்படும் எனவும் கூறினார்.மேலும் இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் ஒவ்வொரு துறையிலும் சிறப்பாகத் தொண்டாற்றிய பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கியும் கவுரவிக்கப்பட்டது.
தமிழகத்தில் சிறந்த மாநகராட்சி,நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.சாதனைகள் புரிந்த பெண்கள்,மாணவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.சென்னைக் கடற்கரை நேப்பியர் பாலம் அருகே அமைக்கப்பட்ட 75வது சுதந்திர தின நினைவுத் துணையும் முதல்வர் திறந்து வைத்தார்.