சுதந்திர தினத்தை முன்னிட்டு இவர்களுக்கெல்லாம் முதல்வரின் சிறப்பு விருது!அரசு வெளியிட்ட பதக்க பட்டியல்!!  

Photo of author

By Rupa

சுதந்திர தினத்தை முன்னிட்டு இவர்களுக்கெல்லாம் முதல்வரின் சிறப்பு விருது!அரசு வெளியிட்ட பதக்க பட்டியல்!!

சுதந்திர தின விழா நாளை நடைபெற உள்ளது.ஒவ்வொரு வருடம் சுதந்திர தின விழா அன்றும் மாணவர்கள் நிகழ்சிகள் நடைபெறும்.ஆனால் தற்போது கொரோனா பெருந்தொற்று காரணமாக எந்தவித நிகழ்சிகளும் நடத்தப்படவில்லை.மேலும் சுதந்திர தின விழா அன்று முதலமைச்சர்கள் தான் கோடி ஏற்ற வேண்டும் என போர்டையவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தான்.

1974 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு சுதந்திர தின விழா மற்றும் குடியரசு தின விழா போன்றவற்றில் ஆளுநர்கள் மட்டுமே கொடிகளை ஏற்றி வநதனர்.அனால் திமுக அப்போது ஆட்சி அமர்தியிருந்தது.அதனால் அப்போது திமுக தலைவர் கருணாநிதி சுதந்திர தின விழா போது கொடியை அம்மாநில முதல்வர்கள் தான் ஏற்ற வேண்டும் என போராட்டம் நடத்தினார்.மேலும் இந்திராகாந்திக்கு இது குறித்து ஓர் கடிதமும் எழுதியிருந்தார்.

இவர் போராட்டம் நடித்தியத்தின் மூலம் நல்ல பலன் கிடைத்தது.1974 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ம் தேதி முதல்வர் கருணாநிதி தேசிய கொடியை ஏற்றினார்.அன்று முதல் சுதந்திர தின விழா நாளன்று அந்தந்த மாநில முதல்வர்களே தேசிய கொடியை ஏற்றி வருகின்றனர்.தற்பொழுது பத்தாண்டுகள் கழித்து முதல்வராக மறைந்த கருணாநிதி மகன் மு.க ஸ்டலின் அவர்கள் நாளை தேசிய கொடியை ஏற்றுவார்.

கொடியை ஏற்றியதும் கடந்த ஆண்டு சிறப்பு மிக்க பணியாற்றியவர்களை பாராட்டும் விதமாக முதல்வரின் சிறப்பு விருதுகள் கொடுக்கப்பட உள்ளது.முதல்வரின் சிறப்பு விருதுகளாக,மக்கள் நல்வாழ்வுத்துறையை சேர்ந்தவர்களுக்கு 9 விருதுகளும்,காவல்துறை சேர்ந்தவர்களுக்கு 3 விருதுகளும்,தீயணைப்பு துறையை சேர்ந்தவர்களுக்கு 3 விருதுகளும் வழங்கப்பட உள்ளது.மேலும் நகராட்சி நிர்வாகத்துறையை சேர்ந்தவர்களுக்கு 6 விருதுகளும்,வருவாய்,பேரிடர் மேலான்மைத்துறை சேர்ந்தவர்களுக்கும் சிறப்பு பதக்கம் வழங்கப்பட உள்ளது.

அதுமட்டுமன்றி கூட்டுறவுத்துறையை சேர்ந்த 3 பேருக்கும்,ஊரட்சித்துறையை சேர்ந்த 6 பேருக்கும் முதல்வரின் சிறப்பு பதக்கம் வழங்க இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.மேலும் மருத்துவர்கள் ரவி,காலிஸ்வரி,சுகந்தி,விக்ரம்,ஆதித்யா போன்றவர்கள் இந்த கொரோனா காலக்கட்டத்தில் சிறப்புடன் செயல்பட்டதால் முதல்வரின் சிறப்பு பதக்கம் வழங்க உள்ளது.செவிலியர் கோமதி,ஆய்வக நுட்புணர்கள் ரெஸ்ட்லின்,அம்மாபொண்ணுவுக்கும் சிறப்பு விருது வழங்கப்பட உள்ளது.