DMK: ஒன்றிய செயலாளர்களுக்கு கார் வழங்குவது குறித்து திமுக பொறுப்பாளர் கவுதமன் அளித்த தகவல்.
சட்டமன்ற தேர்தல் வருவதற்கு இன்னும் ஒன்றரை வருடங்கள் உள்ள நிலையில் கட்சி ரீதியாக பல செயல்பாடுகளை திமுக செய்து வருகிறது. கட்டாயம் இந்த முறை சட்டமன்ற தேர்தலில் வாக்கு வங்கியில் மாற்றம் வர அதிக வாய்ப்புள்ளது. குறிப்பாக தவெக தலைவர் விஜய் கட்சிக்கு பலரும் மாறி வருவதாலும் அவருடன் கூட்டணி வைப்பது குறித்தும் பல எதிர்பார்ப்புக்கள் அரசியல் வட்டாரத்தில் உள்ளது. இவ்வாறு இருக்கையில் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் என இருவரும் மாவட்ட ரீதியாக அரசின் நலத்திட்ட பணிகள் குறித்து ஆய்வு நடித்தி வருகின்றனர்.
இவ்வாறு இருக்கையில் அரியலூர் மாவட்டத்திற்கு முதல்வர் சென்ற பொழுது அம்மாவட்ட அமைச்சர் சிவசங்கர் அங்குள்ள ஒன்றியசெயலாலர்களுக்கு ஜீப் வழங்கி மகிழ்ச்சி படுத்தினார். அரசியல் ரீதியான வேளைகளில் பக்க பலமாக இருந்ததாக கூறி முதல்வர் மூலம் இது வழங்கப்பட்டது. இவ்வாறு இருக்கையில் மற்ற மாவட்ட ஒன்றிய செயலாளர்களும் இதையே எதிர்பார்த்து வருகின்றனர்.
குறிப்பாக வரும் 28ஆம் தேதி முதல்வர் விழுப்புரத்திற்கு செல்ல உள்ளார். இந்த மாவட்டம் அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமானது என்றே கூறலாம். இங்கு மட்டும் 20 ஒன்றிய செயலாளர்கள் இருக்கின்றனர். இவர்கள் கார் கிடைக்குமென பெருமளவு எதிர்பார்ப்பில் உள்ளனர். ஆனால் இதுகுறித்து திமுக பொறுப்பாளராக உள்ள கவுதமணி கூறுகையில், இந்த கார் வழங்குவதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை, அதை எதிர்ப்பார்க்கவும் மாட்டார்கள் என பேசி அப்படியே அதனை முடித்துவிட்டார்.