காங்கிரசிஸிலிருந்து விலகிய மாநில செயல்தலைவர்! ராஜினாமா கடிதத்தில் வெளிவந்த பகிரங்க உண்மை!
குஜராத் மாநிலத்தில் தற்போது சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் கட்சியை விட்டு விலகுவதாக கூறியுள்ளார். மட்டுமின்றி இவர் அனுப்பிய ராஜினாமா கடிதத்தில் பல திடுக்கிடும் உண்மைகளை கூறியுள்ளார். அந்த ராஜனமா கிடைக்காததால் காங்கிரஸ் கட்சி தற்போது பரபரப்பாக காணப்படுகிறது. அதுமட்டுமின்றி தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, இன்று நான் கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறேன். இதனை மக்கள் அனைவரும் வரவேற்பார்கள் என்று நம்புகிறேன். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். மேற்கொண்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பி ராஜினாமா கடிதத்தில் செயல் தலைவர் படேல் கூறியது, காங்கிரஸ் கட்சி சரியான பாதையில் செல்ல பல முயற்சிகள் செய்யப்பட்டது. கட்சி நாடு மற்றும் சமூகத்திற்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி தற்போதைய இளைஞர்கள் திறமையான தலைவர்களையே எதிர்பார்க்கின்றனர்.
ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளில் அவ்வாறான எந்தவித முயற்சியும் காங்கிரஸ் கட்சி எடுக்கவில்லை. அதுமட்டுமின்றி தற்போதைய மக்கள் எதிர்காலத்தைப் பற்றி அதிக அளவு சிந்திக்கின்றனர். இது புது மாற்றங்களை எதிர்பார்க்கின்றனர். ஆனால் அவ்வாறான அரசியலை காங்கிரஸ் கட்சி செய்வதில்லை இவ்வாறு தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இது காங்கிரஸ் கட்சி இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.