மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் எடுத்த முக்கிய வேண்டுகோள்!

Photo of author

By Sakthi

பொதுமக்கள் தங்களுடைய பகுதிகளில் இருக்கக்கூடிய குறை நிறைகளை அந்த துறையை சார்ந்த அதிகாரிகளுக்கு புகார் மனுவாகவும் , தொலைபேசி மூலமாகவும், தெரிவித்து தீர்வு காண முயற்சி செய்கிறார்கள்.இருந்தாலும் அது தொடர்பான அதிகாரிகளின் கைகளில் அந்த புகார் மனுக்கள் கிடைப்பதால் அவர்கள் பெரிய அளவில் அதில் ஆர்வம் காட்டாததால் பல பிரச்சனைகள் தலைமைக்கு தெரியாமலேயே போய்விடுகிறது.

இந்த சூழ்நிலையில், மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியாளர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கைகளை நேரடியாக முதலமைச்சருக்கு தெரிவிக்கும் விதத்தில் முதலமைச்சர் தனிப்பிரிவு கொண்டு உண்டாக்கப் பட்டிருக்கிறது. இந்த பிரிவில் இணையதளம் மற்றும் நேரடி என்று இரண்டு முறைகளிலும் புகார் தெரிவிக்கலாம். ஆனாலும் பெரும்பாலான மக்கள் நேரடியாகவே வந்து புகார் மனு கொடுத்தால் மிக விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கையில் நேரில் வந்து மனு கொடுக்கிறார்கள் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு வரும் மனுக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது என கூறியிருக்கிறார் தலைமைச் செயலாளர் இறையன்பு.

இந்த சூழ்நிலையில், தலைமைச் செயலாளர் இறையன்பு அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் நேற்றைய தினம் கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தில் பொது மக்களுடைய பிரச்சினைகள் போன்றவற்றை மாவட்ட அளவிலேயே தீர்த்து வைக்க மாவட்ட ஆட்சியாளர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் மாவட்ட அளவில் பிரச்சினைகளைத் தீர்க்க காரணத்தால்தான் முதலமைச்சரின் தனிப் பிரிவிற்கு நாள் தோறும் 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் குவிந்து வருகின்றன என தெரிவித்துள்ளார். வட்டம், மாவட்டம் மற்றும் கிராமம் அளவிலேயே தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள் உரிய காலத்தில் தீர்க்கப்படாமல் இருப்பதால் பொறுத்துக் கொண்டு இருந்த மக்கள் குக்கிராமங்களில் இருந்து கோட்டையை நோக்கி புறப்பட்டு வருகிறார்கள். கனவுகள் நிறைந்த கண்களோடும் கவலைகள் நிறைந்த இதயத்தோடு அவர்கள் காத்திருப்பதை பார்க்கும்போது மனம் கலங்குகிறது. ஆகவே மிக விரைவான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதோடு விரிவான ஆய்வின் மூலம் மேலும் மாவட்ட அளவிலான பிரச்சனைகளை மாவட்ட அளவிலேயே தீர்த்துவைக்க மாவட்ட ஆட்சியாளர்கள் முயற்சி செய்யவேண்டும் என கூறியிருக்கிறார்.

ஆர்வத்துடனும், பணிவுடனும், செயல்பட்டால் அவர்கள் தலைமைச் செயலகத்தின் கதவுகளைத் தட்ட வேண்டிய அவசியம் இருக்காது இலக்குகளை அடைவது மட்டுமல்ல பொதுமக்களும் இதயங்களை குளிப்பதும் அரசுப் பணியின் ஓர் அம்சம்தான் எனக் கூறியிருக்கிறார் தலைமைச் செயலாளர் இறையன்பு.மிக அதிக மனுக்களை தீர்த்துவைக்கும் மாவட்ட ஆட்சியாளர்களுக்கு கேடயம் வழங்குவதை விட குறைவான மனுக்கள் எந்த மாவட்டத்தில் இருந்து வருகிறதோ அவர்களுக்கு கேடயம் வழங்கும் நடைமுறையைக் கொண்டு வரும் அளவுக்கு உங்களுடைய பணி இருக்க வேண்டும் என கூறியிருக்கிறார் தலைமைச் செயலாளர்.