முதல்வரின் அடுத்த ரைடு திருவாரூர்! ரூ.12 கோடியில் புதிய கட்டிடம்!
கொரோனா தொற்றின் இரண்டாம் அலை ஆரம்பமாகும் நேரத்தில் தமிழக சட்டமன்ற தேர்தல் தொடங்கியது.தமிழக சட்டமன்ற தேர்தல் முடியும் நேரத்தில் கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் தீவீரமனடைந்து விட்டது.தற்போது திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பல நலத்திட்ட உதிவிகளை மக்களுக்கு செய்து வருகிறது.முதல்வர் மு.க ஸ்டாலின் ஓர் பக்கம் இரவு கண்காணிப்பு என்று சென்றால் அவரது மகன் மற்றும் சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி தனது தொகுதியான சேப்பாகத்தை குட்டி சிட்டியாக மாற்ற முயற்சி செய்ய அவரும் ரைடு செல்கிறார்.அம்மா பத்து அடி பாயிந்தால் குட்டி பதினாறு அடி பாயும் நிலையை போல தற்போது உள்ளது.
அதேபோல முதல்வர் நேரம் காலம் ஏதுமின்றி திடீரென்று கள ஆய்வு பணியில் இறங்குகிறார்.அதேபோல உதயநிதியும் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி தருவது,சாக்கடைகளை சரி செய்வது,நேரடியே மக்களிடம் சென்று அவர்களது கோரிக்கைகளை கேட்டு அதற்கேற்றார் போல் செயல்படுவது என தீவீரம் காட்டி வருகிறார்.இவர் அப்பாவின் நாற்காலிக்கு தயாராகி வருகிறார் என்றும் பலர் விமர்சித்து வருகின்றனர்.
மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திருவாரூர் சென்றுள்ளார்.அங்கு சென்று அங்குள்ள அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடம் ஒன்றை திறந்து வைத்தார்.இந்த திறப்பு விழாவிற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி,சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.திருவாரூர் அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள கட்டிடமானது 12 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது.இந்த கட்டிடத்தில் நான்கு அறுவைசிகிச்சை மையங்கள் மற்றும் 250 நோயாளிகள் படுக்கைககளை மக்களுக்கு ஏற்றவாறு வசதியுடன் கட்டப்பட்டுள்ளது.
அத்தோடு மகப்பேறு மற்றும் குழந்தைகள் சிகிச்சைக்கு தீவீர சிகிச்சை மையாமாக இக்கட்டிடம் விளங்கும் என முதல்வர் ஸ்டாலின் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.தற்போது கொரோனா தொற்றானது அதிகளவு பரவி வருவதால் மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் படி வலியுறுத்தி வருகின்றனர்.அவ்வாறு வலியுறுத்தியதில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாவட்டங்களுக்கு பாராட்டுக்களை முதல்வர் தெரிவித்து வருகிறார்.அந்தவகையில் காட்டூரில் நூறு சதவீதம் தடுப்பூசி செலுத்தியதற்கு அம்மாவட்ட ஆட்சியர் காயத்ரிக்கு பாராட்டு சான்றிதழை வழங்கினார்.