முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் விபத்து:! 4 பேர் பலி! அரசு மருத்துவமனையில் போராட்டம்!

0
114

முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் விபத்து:! 4 பேர் பலி! அரசு மருத்துவமனையில் போராட்டம்!

சேலம் அருகே முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் சிகிச்சை பெற்று வந்த பெண்,சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் அரசு மருத்துவமனையில் போராட்ட சூழல் நிலவி வருகின்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வடதிருவள்ளூர் காட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பூபதி ராஜன் என்பவர். இவர் கடந்த 18ஆம் தேதியன்டு தனது குடும்பத்துடன் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியிலுள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு காதணி விழாவிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார்.

அப்போது சேலம் மாவட்டம் ஆத்தூர் காட்டுக்கோட்டை அருகே சென்று கொண்டிருந்தபோது, முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனமானது முன்பு சென்று கொண்டிருந்த ராஜனின் கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது.இந்த விபத்தில் ராஜன் காரில் இருந்த 4 பேர் படுகாயமடைந்து ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில் பலத்த காயமடைந்த சௌந்தரம் என்ற பெண் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.ஆனால் அப்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உறவினர்கள் உயிர் இழப்புக்கு காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும்,அவர்களின் மீது FIR பதிவு செய்யும் வரை இறந்தவரின் உடலை உடற்கூறாய்வு அனுப்ப சம்மதிக்க மாட்டோம் என்றும் கூறி சேலம் அரசு மருத்துவமனை முன்பு, சௌந்தரதின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் சேலம் அரசு மருத்துவமனையில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Previous articleஇந்த ராசிக்கு இன்று சந்திராஷ்டமம் எதிலும் கவனம் தேவை ! இன்றைய ராசி பலன் 27-10-2020 Today Rasi Palan 27-10-2020
Next articleரத்தக் கொதிப்பு இரத்த அழுத்தம் நீங்க! இந்த டீயை குடித்து பாருங்கள்!