நேரு மாமா பிறந்தநாளை மலை ரெயிலில் கொண்டாடிய குழந்தைகள்!
மேற்கு வங்காளத்தில் நியூ ஜல்பைகுரி மற்றும் டார்ஜிலிங் இடையே டாய் டிரெயின் எனப்படும் மலை ரெயில் இயக்கப்படுகிறது.நேற்று நமது நாட்டின் முதல் பிரதமர் பண்டிட் ஜவகர்லால் நேருவின் பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது.அவரது பிறந்தநாளை இந்தியா முழுவதும் குழந்தைகள் தினம் ஆகவும் கொண்டாடப்படுகிறது.
இதனை தொடர்ந்து சிலிகுரி நகரை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் சிலிகுரி பகுதியில் இருக்கு ஒரு ஆசரமத்தில் இருக்கும் 50 பார்வையற்ற குழந்தைகள் மற்றும் சில மாற்று திறனாளி குழந்தைகளை மலை ரெயில் பயணம் கூட்டிசெல்ல திட்டமிட்டனர்.அதே போல் நேற்று குழந்தைகள் தினம் முன்னிட்டு,அந்த குழைந்தைகளை சிலிகுரி சந்திப்பில் இருந்து ரோங்டாங் வரையிலான 18 கி.மீ. தொலைவு மலை ரெயில் பயணத்தில் அழைத்து செல்லப்பட்டனர்.
இதில் பயணித்த அந்த பார்வையற்ற குழந்தைகள் எங்களால் பர்க்கத்தான் முடியாது ஆனால் கேட்க முடியும் இது போன்ற இயற்கை சத்தத்தை கேட்பது இதுவே முதல்முறை என்றும் மற்ற மாணவர்கள் இது எங்களது முதல் மலை ரெயில் பயணம் ஆகும். ஆச்சரியம் நிறைந்து இருந்தது. இந்த நாளை நாங்கள் அளவு கடந்த மகிழ்சியுடன் கொண்டாடினோம் என்று கூறியுள்ளார்கள்.இந்த பயணத்தில், கலந்து கொண்ட மாணவ மாணவிகள் ரெயிலில் பாட்டுக்கள் பாடியும், நடனம் ஆடியும் மகிழ்ந்தனர்.