குழந்தைகளுக்கு இந்த இடத்தில் எல்லாம் முத்தம் கொடுக்கக் கூடாது.. எதற்காக தெரியுமா??
குழந்தைகள் என்றால் அனைவருக்குமே பிடிக்கும்.பேருந்து அல்லது ரயில்களில் பயணம் செய்யும்போது அருகில் யாராவது குழந்தைகளை வைத்திருந்தால் நம்மையே அறியாமல் அந்த குழந்தைகளுடன் நாம் விளையாட தொடங்குவோம். இல்லையெனில் அந்த குழந்தையை தூக்கி கொஞ்சுவோம்.எப்படிப்பட்ட நபராக இருந்தாலும் ஒரு குழந்தையின் சிரிப்பில் மயங்கி விடுவார்கள்.
மேலும், நாம் குழந்தைகளை பார்த்ததும் ஆசையாக அவர்களை தூக்கி முத்தமிடுவோம்.ஆனால் குழந்தைகளுக்கு எங்கெல்லாம் முத்தம் கொடுக்கக் கூடாது என்று உங்களுக்கு தெரியுமா?முக்கியமாக குழந்தைகளுக்கு காதில் முத்தம் கொடுக்கவே கூடாதாம். அப்படி கொடுப்பதன் மூலம் அவர்களின் கேட்கும் திறன் நிரந்தரமாக குறைய வாய்ப்புள்ளதாம்.
அதாவது குழந்தையின் காதில் முத்தமிடும்போது அவர்களின் காதுகளில் சத்தம் ஏற்பட்டு ஒலி சிதைவு மற்றும் கேட்கும் திறன் போன்ற உணர்வு திறன் பாதிக்கப்படலாம்.இதை காக்லியர் காது முத்த காயம் என்று அழைக்கிறார்கள். அதேபோல குழந்தைகளின் சருமம் மிகவும் மென்மையானது. எனவே சில நேரங்களில் யாராவது முத்தமிடும்போது அலர்ஜி காரணமாக சொறி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
இதுதவிர குழந்தையின் உதடு மற்றும் முகத்தில் முத்தமிடும்போது காய்ச்சல் மற்றும் சுவாச நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.அதுமட்டுமின்றி குழந்தைகள் பிறந்த பிறகு அவர்களுக்கு முறையான தடுப்பூசி போட வேண்டும். தடுப்பூசி போடாத நிலையில், குழந்தைகளுக்கு முத்தமிட்டால் உங்கள் உமிழ்நீர் மூலம் ஹெப்டைடிஸ் பி பரவும் அபாயம் உள்ளது.எனவே குழந்தைகளை முத்தமிடும் முன்பாக நன்கு யோசித்து முத்தமிடுவது நல்லது.