குழந்தைங்க உயிருக்கே ஆபத்து.. உடனே தடை பண்ணுங்க.. பிரபல இயக்குனர் பகிர்ந்த அதிர்ச்சி வீடியோ.!
பழைய வண்ணாரப்பேட்டை படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் மோகன் ஜி. இருப்பினும் அந்த படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. அதனை தொடர்ந்து இவர் இயக்கி திரெளபதி படம் தான் மோகனை ரசிகர்கள் மத்தியில் அடையாளப்படுத்தியது. அதுமட்டுமின்றி படமும் பெரியளவில் பேசப்பட்டது.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து ருத்ரதாண்டவம், பாகாசூரன் ஆகிய படங்களை இயக்கினார். இதுதவிர சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மோகன் ஜி சில சமூக கருத்துள்ள வீடியோக்களை ஷேர் செய்வதை வழக்கமாக வைத்திருப்பார். அந்த வகையில் தற்போது இவர் ஷேர் செய்துள்ள வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில் ஸ்மோக் பிஸ்கட் ஒன்றை ஆசையாக வாங்கி சாப்பிடும் சிறுவன் அடுத்த நொடியே வலியால் துடிக்கிறான். இந்த வீடியோவை ஷேர் செய்துள்ள மோகன் ஜி அதற்கு கேப்ஷனாக, “இதுபோன்ற ஸ்மோக் பிஸ்கட் திண்பண்டங்களை உடனடியாக தடை செய்ய வேண்டும். அதில் இருந்து வரும் புகையை பார்த்து குழந்தைகள் ஆசையாக அதை வாங்குகிறார்கள்.
ஆனால் அதில் ஊற்றப்படுவது லிக்விட் நைட்ர்ஜன். அதை ஒரு ஸ்பூன் உட்கொண்டால் கூட குழந்தைகளின் உயிருக்கே ஆபத்து. உடனடியாக தமிழக அரசு இதற்கு தடை விதிக்க வேண்டும். பொருட்காட்சி மற்றும் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் இதுபோன்ற உணவுகள் வழங்கப்படுகிறது. எனவே தடை செய்ய வேண்டும்” என தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.