இந்திய ராணுவத்துடன் லடாக் எல்லையில் சீன வீரர்கள் தாக்கியதில் 20 வீரர்கள் உயிரிழந்தனர். இருநாட்டு ராணுவ படைகளும் எல்லையில் குவித்து பமற்றமான நிலை உருவாகி வருகிறது. இந்த சம்பவத்தின் எதிரொலியாக சீன செயலிகளை இந்தியாவில் தடை செய்து ஆப்பு வைத்துள்ளது.
இணையத்தில் பொழுதுபோக்கு செயலியான டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 59 சீன செயலிகளை இந்தியாவில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த செயல்பாட்டிற்கு சீனா கண்டனம் தெரிவித்த நிலையில், சீன அரசின் ஊடகமான குளோபல் டைம்ஸ் டிக்டாக் செயலி தடையால் அதன் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் நிறுவனத்திற்கு ரூ.45,000 கோடி வருமான இழப்பீடு ஏற்படும் என கூறியுள்ளது.
அமெரிக்காவை விட இந்தியாவில் இரண்டு மடங்கு பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். இந்திய அரசு தடை விதித்ததால் சீன செயலிகள் முதலீட்டாளர்கள் வர்த்தகம் பாதிப்பு அடைந்துள்ளது. செல்போன் செயலிகளை ஆய்வு செய்யும் சென்சார் டூவர் நிறுவனம் அளித்த தகவலின்படி, கடந்த மே மாதம் 11 கோடிக்கும் மேற்பட்டோர் டிக்டாக் செயலியை டவுன்லோடு செய்துள்ளனர். இந்தியாவின் திடீர் தடைவிதிப்பால் சீனாவிற்கு 45 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என கூறப்பட்டுள்ளது.