பாரத் பஜாருக்கு பதில் சைனா பஜார்! எங்கே போனது மேக் இன் இந்தியா! – ஒன்றிய அரசை தாக்கிய முதல்வர் 

0
334

பாரத் பஜாருக்கு பதில் சைனா பஜார்! எங்கே போனது மேக் இன் இந்தியா! – ஒன்றிய அரசை தாக்கிய முதல்வர் 

மேக் இந்தியா திட்டம் பற்றி தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மேக் இன் இந்தியா அல்ல ஜோக் இன் இந்தியா என மத்திய அரசை கடுமையாக தாக்கியுள்ளார்.

தெலுங்கானா முதல் மந்திரியாக இருக்கும் சந்திரசேகர் ராவ் தனது கட்சியை தேசிய அளவில் விரிவுபடுத்தி வலுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதற்காக தனது கட்சியின் பெயரை பாரத ராஷ்டிரிய சமிதி கட்சி என பெயர் மாற்றம் செய்து தேர்தல் ஆணையத்திடம் அதற்கான ஒப்புதலையும் பெற்றுவிட்டார்.

தேசிய அளவில் அங்கீகாரம் கிடைத்ததும் ஆம் ஆத்மி கட்சி,  இடதுசாரிகள், மற்றும் சமாஜ்வாடி கட்சி என பிற கட்சித் தலைவர்களை கொண்ட மிகப்பெரும் பேரணியை கடந்த மாதம் கம்மம் நகரில் நடத்தினார். இதைத்தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவுக்கு மாற்றான தேசிய கட்சியாக  தனது கட்சி  உருவாக வலுப்படுத்தி வருகிறார்.

இதன் தொடர்ச்சியாகவே மகாராஷ்டிரா மாநிலத்தில் நான்டெட் நகரில் நடந்த பொதுப் பேரணியில் கலந்து கொண்டு பேசினார். அதில் அவர் பேசும்போது பாஜக தலைமையிலான மோடி அரசை கடுமையாக தாக்கி பேசினார். மோடியின் திட்டங்களுள் ஒன்றான மேக் இன் இந்தியா ஜோக் இன் இந்தியாவாக மாறிவிட்டது என அவர் கேலி செய்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி 54 ஆண்டுகளும் பாஜக கட்சி 16 ஆண்டுகளும் இந்தியாவை ஆட்சி செய்தன. சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகளில் 70 ஆண்டுகள் இந்த இரு கட்சிகளுமே இந்தியாவை ஆட்சி செய்துள்ளன. சரிவர ஆட்சி நடத்தாமல் பேச்சு போட்டி நடத்துவதிலும் ஊழல் செய்வதிலும் இரு கட்சிகளும் ஒருவரை ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு செய்கின்றனர். நாட்டில் நடைபெறும் அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த இரு கட்சிகளுமே பொறுப்பு.

மேக் இன் இந்தியா திட்டம் ஒன்றும் சாதிக்கவில்லை. அப்படி வெற்றி பெற்று இருந்தால் நகரம் மற்றும் கிராமங்கள் தோறும் சைனா பஜார்கள் இருந்திருக்காது. சீனப் பொருட்கள் இந்திய சந்தைகளை ஆக்கிரமித்து திணறடித்து  வருகின்றன.

பட்டம் பறக்க விடுவதற்கான மாஞ்சா நூலில் இருந்து, தீபாவளி பட்டாசுகள், ஹோலி பண்டிகைக்கான கலர் பொடிகள், மற்றும் விளக்குகள் மற்றும் விநாயகர் சிலைகள் என, அவ்வளவு ஏன்  நமது  தேசிய மூவர்ண கொடி என ஒவ்வொரு பொருளும் சீனாவில் இருந்து வருகின்றன.

சீன பொருட்கள் இவ்வாறு உள்ளதால் மேக் இன் இந்தியா திட்டம் எங்கே போனது? பாரத் பஜார் எங்கே?  ஒவ்வொரு இடங்களிலும் பாரத் பஜாருக்குபதில் ஏன் சைனா பஜர்கள் அதிகம் உள்ளன? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Previous articleதங்கம் விலை மீண்டும் உயர்வு! இனி கடைக்கு போக வாய்ப்பில்லை என புலம்பும் இல்லத்தரசிகள்!
Next articleநீட் தேர்வு ரகசியத்தை வெளியிட தயாரா? உதயநிதி ஸ்டாலினுக்கு ஆர்.பி.உதயகுமார் அடுக்கடுக்கான கேள்வி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here