Iran-Israel:ஈரான் மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் இராணுவக் கூட்டுப் பயிற்சி மேற்கொள்ளப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்ரேல் ஈரான் நிலையே நடைபெற்ற வரும் இரண்டாம் கட்ட குண்டு மழை லெபனானின் விமான நிலையத்தில் பொழிந்தது இதில் ஏராளமான மக்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி வந்தது. ஈரானுக்கு ஆதரவாக சீனா களம் இறங்கும் என கூறப்படுகிறது.
சீனா ஜே 10 சி என்ற ரக 100 போர் விமானங்களை வழங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது உண்மையிலேயே இஸ்ரேலுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. பாலஸ்தீனத்தில் நடைபெற்ற காசா மீதான போர் மற்றும் லெபனானின் இஸ்புல்லா அமைப்புகளுக்கு எதிரான தாக்குதல் ஆகிய போர்களால் இஸ்ரேல் மீது ஈரம் பெரும் கோபத்தில் இருக்கிறது.
இதில் இஸ்ரேல் ஈரான் தலைநகர் டெக்ரானில் வைத்து கமாஸ் தலைவனை கொன்றது. அதுமட்டுமல்லாமல் லெபனானில் வைத்து இஸ்புல்லாவின் தலைவரை கொன்றது இதனால் ஈரான் கோபம் உச்சமடைந்து இருக்கிறது. இதனிடையே இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
இதற்கு பதிலடியாக லெபனானில் உள்ள விமான நிலையத்தில் இஸ்ரேல் பதிலடி தாக்குதலை நடத்தியது. இதனால் இஸ்ரேல் இதனிடையே பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இஸ்ரேல் ஈரான் போரை பொறுத்தவரை சீனா ஈரான் பக்கம் இருக்கிறது. ஆனால் அமெரிக்கா இஸ்ரேல் பக்கம் தான் ஆதரவாக உள்ளது.
இந்த விமானப்படைகள் அனுப்புவதன் மூலம் இஸ்ரேலுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சீனா ஒரு சக்திவாய்ந்த நாடாக இருக்கிறது. நவீன விமானப்படை கப்பற்படை தொழில்நுட்பங்களை சீனாவால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் சீனாவில் 12ஆம் தேதி விமான கண்காட்சி நடந்தது. ஈரான் விமானப்படை தலைவர் ஹமீத் பங்கேற்றார்.
போர் விமான ஜே 10 சி ரக போர் விமானத்தை பார்த்து வியப்பில் ஆழ்ந்தார். இரு நாடுகளும் அவ்வப்போது ராணுவ கூட்டு பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இதனால் ஈரான் விரைவில் 100 ஜே 10 சி ரக போர் விமானங்களை வாங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இந்த ஜே 10 சி ரக போர் விமானங்களால் அதிகமாக தாக்குதல் கொடுக்க முடியும் என ஈரான் நினைக்கிறது. இதனால் இஸ்ரேலுக்கு பெரும் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.